ஓருதிரைப்படத்தில்வடிவேலுபெண்பார்க்கவரும்சமயம்
பெண்ணின்தந்தைசொல்லுவார்.....வாம்மா...மின்னல்..
அதுபோல புகைப்படத்தில் அந்த மின்னலை நாம்
சுலபமாக வரவழைக்கலாம். முதலில் இந்த
புகைப்படங்களை பாருங்கள்.
அட ...என்னமாதிரியான கேமராப்பா....மின்னல் ஒளியை கூட அழகாக படம் பிடித்துள்ளது என்று தோன்றுகின்றதா..? ஆனால் உண்மை அதுவல்ல...இது சாதாரணகேமராவில் புகைப்படம் எடுத்து அதில் இந்த மின்னல் எபெக்டை கொண்டுவந்துள்ளேன்.கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்.
சாதாரண புகைப்படத்தில இந்த மாதிரி மின்னல் எபெக்ட்டை பிரஷ் டூல் மூலம் கொண்டுவரலாம். முதலில பிரஷ் டூலை போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது என்று நான் முன்னரே பதிவிட்டுள்ளேன். போட்டோஷாப்பில் பிரஷ் டூலை எவ்வாறு இணைப்பது என்பதை காண இங்கு கிளிக் செய்யவும்.
இந்த மின்னல் பிரஷ்டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் மொத்தம் 6 விதமான பிரஷ்கள் உள்ளன.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
அவரைப்பாருங்கப்பா...அவருக்கு பினனால் ஒரு ஒளிவட்டம் தெரிகின்றது என்று சொல்லுவார்கள். அந்த ஒளிவட்டமும் இந்த டூல் மூலம் கொண்டுவரலாம். மற்றும் ஒரு புகைப்படம் கீழே-
பதிவினை பாருங்கள். சந்தேகம்இருப்பின கருத்துக்களில் கேளுங்கள. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.நாளை சந்திப்போம்.








No comments:
Post a Comment