Tuesday, February 22, 2011

3ஜி


தொழில்நுட்பம் - கைபேசி
பொதுவாக 3ஜி அல்லது 3வது தலைமுறை என்று அறியப்படும் சர்வதேச மொபைல் தொலைதொடர்புகள்-2000 (IMT-2000) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட கைபேசி தொலைதொடர்பு தரமுறைகளாகும். ஜிஎஸ்எம், எட்ஜ், யூஎம்டீஎஸ் மற்றும் சிடிஎம்ஏ2000 ஆகியவையும், அத்துடன் டெக்ட் (DECT) மற்றும் வைமேக்ஸ் ஆகிய தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். இதில் அகல்-பரப்பு கம்பியில்லா குரலொலி தொலைபேசி (wide-area wireless voice telephone), ஒளிப்பட அழைப்புகள் மற்றும் கம்பியில்லா தரவு பரிமாற்றம் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே தொழில்நுட்ப தளத்தில் உள்ளடங்கி கிடைக்கின்றன. 2ஜி மற்றும் 2.5ஜி சேவைகளை ஒப்பிடும் போது, 3ஜி சேவையானது குரலொலி மற்றும் தரவு சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில் எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது. இவ்வாறு, மேம்பட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டின் மூலம் பெரிய வலையமைப்பு திறனைக் கொண்டு, தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் பயனர்களுக்கு பல பரந்த நவீன சேவைகளை அளிக்க 3ஜி வலையமைப்புகள் உதவுகின்றன.

சர்வதேச தொலைதொடர்பு ஆணையம் (ITU), வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பேண்ட்விட்த்தை அதிகரிக்கவும், பல்வேறு மாறுபட்ட பயன்பாடுகளுக்கு உதவவும் மொபைல் தொலைபேசி தரமுறைகளின் மூன்றாம் தலைமுறையை - அதாவது, IMT-2000 என்பதை - வரையறுத்திருக்கிறது. உதாரணமாக, ஜிஎஸ்எம் (தற்போது பிரபலமாக இருக்கும் கைபேசி தரமுறை) குரல் சேவையை அளிப்பதுடன், சர்க்யூட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளை நொடிக்கு 14.4 கிலோபிட்கள் என்ற பதிவிறக்க விகிதத்தில் கையாள இந்த நுட்பம் அனுமதிக்கிறது. ஆனால் மொபைல் மல்டிமீடியா பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், மிக விரிந்த அகல்கற்றைகளில், சிறப்பார்ந்த அலைவரிசை பயன்பாட்டுடன் 3ஜி நுட்பமானது பேக்கெட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளைக் கையாள்கிறது.

பொருளடக்கம்:
1. மேலோட்டப் பார்வை
2. வரலாறு
3. வசதிகள்
4. இரண்டாம் தலைமுறையில் இருந்து பரிணாம வளர்ச்சி
5. 4ஜி நோக்கிய பரிணாமம்
6. குறைபாடுகள்


1. மேலோட்டப் பார்வை

1999ல், ITU-R M.1457 பரிந்துரைகளின் ஒரு பகுதியாக IMT-2000-த்திற்கான ஐந்து ரேடியோ இடைமுகங்களுக்குச் சர்வதேச தொலைதொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்தது; இதில் 2007ல் வைமேக்ஸூம் சேர்த்து கொள்ளப்பட்டது.

தற்போதிருக்கும் இரண்டாம் தலைமுறை வலையமைப்புகளுக்கு முந்தைய வலையமைப்புகளுக்கு பொருந்தும் விரிவாக்கங்களுக்கான பரிணாம தரமுறைகளும் இருக்கின்றன. அதே போல அனைத்து புதிய வலையமைப்புகளுக்கும், அலைவரிசை பகுப்புமுறைகளுக்கும் ஏற்ற புரட்சிகர தரமுறைகளும் இருக்கின்றன. இரண்டாவதாக சொல்லப்பட்டது, யூஎம்டிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது IMT-2000-க்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தரமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, தன்னிச்சையாக அபிவிருத்தி செய்யப்பட்ட டெக்ட் மற்றும் வைமேக்ஸ் தரமுறைகளும் IMT-2000 வரையறைகளுக்கு பொருந்தி வருவதால் அவையும் அதனோடு சேர்க்கப்பட்டிருக்கின்றன.

3ஜி/IMT-2000 தரமுறைகளைப் பற்றிய முன்னுரை
  • ITU IMT-2000 பொதுவான பெயர்(கள்) தரவின் அகல்நிலை 4ஜி -க்கு முந்தைய நிலை இருதரப்பு முறை (Duplex) தடம் (channel) பொருள் புவியியல் பகுதிகள்
  • டீடிஎம்ஏ ஒரே அலைத்தொகுப்பு (IMT-SC) எட்ஜ் (UWT-136) எட்ஜ் பரிணாமம் ஒன்றும் கிடையாது எப்டிடி டீடிஎம்ஏ ஜிஎஸ்எம்/ஜிபிஆர்எஸ்-க்கான அபிவிருத்தி[nb 1] ஜப்பான் மற்றும் கொரியாவைத் தவிர உலகின் மற்ற எல்லா இடங்களிலும்
  • சிடிஎம்ஏ பல அலைத்தொகுப்பு(IMT-MC) சிடிஎம்ஏ2000 ஈவி-டிஓ யூஎம்பி [nb 2] சிடிஎம்ஏ சிடிஎம்ஏஒன் (IS-95)-க்கான அபிவிருத்தி அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஏனைய நாடுகளிலும்
  • சிடிஎம்ஏ நேரடி அலைத்தொகுப்பு (IMT‑DS) UMTS[nb 3] டபிள்யூ-சிடிஎம்ஏ [nb 4] எச்எஸ்பிஏ எல்டீஈ புரட்சிகர தரமுறைகளின் குடும்பம் உலகெங்கிலும்
  • சிடிஎம்ஏ டீடிடி (IMT‑TC) டீடி-சிடிஎம்ஏ [nb 5] டீடிடி (TDD) ஐரோப்பா
  • டீடி-எஸ்சிடிஎம்ஏ [nb 6] சீனா
  • எப்டிஎம்ஏ/டீடிஎம்ஏ (IMT‑FT) டெக்ட் ஒன்றும் கிடையாது எப்டிஎம்ஏ/டீடிஎம்ஏ குறுகிய தூரம்; கம்பியில்லா தொலைபேசிகளுக்கான தரமுறை ஐரோப்பா, அமெரிக்கா
  • ஐபி-ஓஎஃப்டிஎம்ஏ (IP-OFDMA) வைமேக்ஸ் (IEEE 802.16) ஓஎப்டிஎம்ஏ பின்னால் சேர்க்கப்பட்டது உலகெங்கும்

எட்ஜ் என்பது 3ஜி தரமுறையின் ஒரு பாகமாக இருந்த போதிலும், பெரும்பாலான ஜிஎஸ்எம்/யூஎம்டீஎஸ் தொலைபேசிகள் எட்ஜ் (“2.75ஜி”) மற்றும் யூஎம்டீஎஸ் (“3ஜி”) வலையமைப்பு சேவைகளைத் தனித்தனியாக பிரித்து தான் குறிப்பிடுகின்றன.

2. வரலாறு
டபிள்யூ-சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தின் முன்னோட்ட வெளியீடாக 2001ஆம் ஆண்டு மே மாதம், எப்ஓஎம்ஏ (FOMA) என்ற பெயரில் ஜப்பானில் என்டீடீ டொகோமோ நிறுவனம் வர்த்தரீதியான வெளியீட்டிற்கு முந்தைய முன்னோட்டமாக முதல் 3ஜி வலையமைப்பை அறிமுகப்படுத்தியது. மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் முதல் வர்த்தகரீதியான வெளியீடு 2001ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி என்டீடீ டொகோமோ நிறுவனத்தாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பநிலையில் அதில் குறைவான வசதிகளே இருந்தன. நம்பகத்தன்மையில் இருந்த வெளிப்படையான குறைபாடுகளால், பரந்த விரிவாக்கம் தாமதப்பட்டது. 2002 ஜனவரியில், 1xஈவி-டிஓ தொழில்நுட்பத்தில் தென்கொரியாவில் எஸ்கே டெலிகாம் நிறுவனத்தால் உலகின் இரண்டாவது 3ஜி வலையமைப்பு வர்த்தகரீதியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 2002 மே மாதம், தென் கொரியாவில் இரண்டாவது 3ஜி வலையமைப்பு கேடீஎப் (KTF) நிறுவனத்தால் EV-DO தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு மூன்றாம் தலைமுறை சேவை வழங்குனர்களின் மத்தியில் ஏற்பட்ட போட்டியை முதன்முதலாக கொரிய மக்கள் தான் பார்த்தார்கள்.

ஐரோப்பாவில் வர்த்தகரீதியான வெளியீட்டிற்கு முந்தைய வெள்ளோட்ட வெளியீடு முதன்முதலில் Manx டெலிகாம் நிறுவனத்தால், ஐல் ஆப் மேனில் (Isle of Man) கொண்டு வரப்பட்டது. இந்த நிறுவனம் பின்னர் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் முதல் வர்த்தகரீதியான வலையமைப்பு வியாபாரத்திற்காக டிசம்பர் 2001ல் டெலினார் (Telenor) நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது. அப்போது வர்த்தகரீதியான கைபேசிகள் எதுவும் இல்லாததால் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களும் இருக்கவில்லை. இவை இரண்டுமே டபிள்யூ-சிடிஎம்யூ தொழில்நுட்பத்தில் அமைந்திருந்தன.

அமெரிக்காவில் முதல் வர்த்தகரீதியான மூன்றாம் தலைமுறை வலையமைப்பு மோனெட் மொபைல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தால், சிடிஎம்ஏ2000 1x EV-DO தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த வலையமைப்பை அளித்த நிறுவனம் பின்னர் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டார்கள். ஆகவே அமெரிக்காவில் இரண்டாவது 3ஜி வலையமைப்பு சேவை வழங்குனராக அக்டோபர் 2003ல் வந்தவர்கள் வெரிஜோன் வயர்லெஸ் நிறுவனம். இதுவும் சிடிஎம்ஏ2000 1x EV-DO தொழில்நுட்பத்தில் இருந்தது. இந்த வலையமைப்பு அப்போதிருந்து சிறப்பாக வளர்ந்து வருகிறது.

தெற்கு பிராந்தியத்தில் கொண்டு வரப்பட்ட முதல் வெள்ளோட்ட வலையமைப்பு, தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலைய்டில், m.Net கார்பரேஷன் நிறுவனத்தால் பிப்ரவரி 2002-ல், 2100 மெகா ஹெட்ஜ் அலைவரிசையில் யூஎம்டிஎஸ் தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. இது 2002-ஆம் ஆண்டு நடந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் காட்டப்பட்ட முன்னோட்ட வலையமைப்பாகும். வர்த்தரீதியான முதல் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு, மார்ச் 2003-ல் Three என்ற வர்த்தக பெயரில் ஹட்சஷன் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சர்வதேச மொபைல் வினியோக அமைப்பின் (GSA) தகவலின்படி, டிசம்பர் 2007-ல், 40 நாடுகளில் 190 மூன்றாம் தலைமுறை வலையமைப்புகளும், 71 நாடுகளில் 154 எச்எஸ்டிபிஏ (HSDPA) வலையமைப்புகளும் இயக்கத்தில் இருந்தன. ஆசியா, ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள், மூன்றாம் தலைமுறை செல்பேசி வலையமைப்புகளை இயக்க, டபிள்யூ-சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

ஐரோப்பாவில், மக்களுக்கான மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு சேவைகள் மார்ச் 2003-ன் தொடக்கத்தில் Three நிறுவனத்தால் (ஹட்சசன் வாம்போ நிறுவனத்தின் ஒரு பகுதி) இங்கிலாந்திலும், இத்தாலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. 2005-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய தேசிய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினருக்கு சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும் என்று மூன்றாம் தலைமுறை சேவை வழங்குனர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவுறுத்தியது.

சில நாடுகளில் அலைத்தொகுப்பு (Spectrum) உரிம கட்டணங்கள் மிக அதிகளவில் இருந்ததால், மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு வலையமைப்புகளைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. பல நாடுகளில், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அதே ரேடியோ அலைவரிசைகள் மூன்றாம் தலைமுறை வலையமைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக புதிய வலையமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும், புதிய அலைவரிசைகளுக்கு உரிமம் வாங்க வேண்டிய தேவையும் செல்பேசி சேவை வழங்குனர்களுக்கு ஏற்பட்டது. இதில் விதிவிலக்காக இருந்தது அமெரிக்கா மட்டுமே. இங்கு பிற சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அதே அலைவரிசைகளே மூன்றாம் தலைமுறை சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. சில ஐரோப்பிய நாடுகளில் உரிம கட்டணம் மிக அதிகமாக இருந்தது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான உரிமங்கள், முத்திரையிடப்பட்ட ஒப்பந்தபுள்ளி நடவடிக்கைகள், 3ஜி வலையமைப்பின் மீது தொடக்கத்தில் இருந்த சந்தேகங்கள் போன்ற அரசாங்க நடவடிக்கைகள் தடையாக இருந்து வந்தன. புதிய அமைப்புமுறைக்குத் தொழில்நுட்ப சாதனங்களை மாற்றுவதில் இருந்த செலவுகளும் தாமதத்திற்கு மற்றொரு காரணமாக அமைந்தன.

2007-ஆம் ஜூன் வாக்கில், மூன்றாம் தலைமுறை வலையமைப்பில் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்திருந்தார்கள். அப்போது, உலகெங்கிலும் இருந்த 3 பில்லியன் கைபேசி வாடிக்கையாளர்களில் இது வெறும் 6.7% மட்டுமே. முதன்முதலில் மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் 3ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது. ஐரோப்பாவில் முன்னணியில் இருந்த நாடு இத்தாலி. இதன் தொலை தொடர்பு வாடிக்கையாளர்களில் மூன்று பகுதியினர் 3ஜி சேவைக்கு மாறியிருந்தார்கள். 20 சதவீத அளவிற்கு மாறிய நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை மூன்றாம் தலைமுறைக்கு மாறியதில் முன்னணியில் இருந்த பிற நாடுகளாகும். சிடிஎம்ஏ2000 1x RTT வாடிக்கையாளர்களே 3ஜி வாடிக்கையாளர்களாக இருந்ததால், புள்ளிவிபரங்கள் கணக்கிடுவதில் குழப்பம் இருந்து வந்தது. இந்த வரையறையின்படி பார்த்தால், ஜூன் 2007-ல் 475 மில்லியன் 3ஜி வாடிக்கையாளர்கள் இருந்திருப்பார்கள், உலகளவில் இருந்த மொத்த வாடிக்கையாளர்களில் இது 15.8 சதவீதமாகும்.

இன்றும் கூட, பல வளரும் நாடுகள் 3ஜி உரிமங்களை வழங்கவில்லை. இங்கு வாடிக்கையாளர்கள் மூன்றாம் தலைமுறை சேவைகளுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதில் சீனா அதன் முடிவை பல ஆண்டுகள் தள்ளி போட்டு வந்தது. முக்கியமாக சிறந்த தரமுறைகளை உருவாக்குவதற்கான அவர்களின் அரசாங்கத்தின் தாமதத்தினால் இவ்வாறு ஏற்பட்டு வந்தது. மே 2008ல், தொலைதொடர்பு துறையை மறுசீரமைக்க போவதாகவும், 3ஜி வலையமைப்புகளுக்கு இடமளிக்கப்படும் என்றும், இதன் மூலம் முன்னணி செல்பேசி சேவை வழங்குனரான சீனா மொபைல் அதன் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர் தளத்தைத் தக்க வைத்து கொள்ள முடியும் என்றும் சீனா அறிவித்தது. இதன் மூலம், சீனா யூனிகாம் (China Unicom) நிறுவனமும் அதன் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து கொள்ளும், ஆனால் அதன் சிடிஎம்ஏ2000 தொழில்நுட்பத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை, உலகளவில் முன்னணியில் இருந்த டபிள்யூ-சிடிஎம்ஏ (UMTS) தரமுறைக்கு மாற்றி 3ஜி சேவையை அறிமுகப்படுத்த வேண்டியதிருந்தது. இதனால் சீனா யூனிகாமின் பெரும்பாலான சிடிஎம்ஏ2000 வாடிக்கையாளர்கள், அப்போது சிடிஎம்ஏ 1x EV-DO தரமுறையில் 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய சீனா டெலிகாம் (China Unicom நிறுவனத்தின் சேவைக்கு மாறினார்கள். மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு தரமுறைகளில் இருந்த மூன்று முக்கிய செல்லுலர் தரமுறைகளும் சீனாவில் வர்த்தகரீதியாக பயன்பாட்டில் இருந்தது. இறுதியாக ஜனவரி 2009-ல், சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் மூன்று தரமுறைகளுக்கும் உரிமங்களை வழங்கியது. TD-SCDMA தொழில்நுட்பம் சீன மொபைல் நிறுவனத்திற்கும், WCDMA தொழில்நுட்பம் சீன யூனிகாம் நிறுவனத்திற்கும், CDMA2000 தொழில்நுட்பம் சீன டெலிகாம் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.

நவம்பர் 2008-ல், 45, 40, 35 மற்றும் 25 MHz எனும் முக்கிய அலைவரிசைகளுடன் IMT/UMTS தரமுறையில் நான்கு 3ஜி உரிமங்களைத் துருக்கி வழங்கியது. துர்க்செல் நிறுவனம் €358 மில்லியன் கொடுத்து 45 MHz அலைவரிசைகளை வாங்கியது. அதை தொடர்ந்து வோடாபோன் மற்றும் ஏவியா (Avea) நிறுவனங்கள் முறையே 40 மற்றும் 35 MHz அலைவரிசைகளை 20 ஆண்டுகளுக்கு வாங்கின.

மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் முதல் ஆப்ரிக்க பயன்பாடு, நவம்பர் 2004-ல் ஜோகன்ஸ்பர்க் வோடாகாம் வலையமைப்பில் ஒரு 3ஜி வீடியோ அழைப்பாக அறிமுகபடுத்தப்பட்டது. ஆப்ரிக்காவில் முதல் வர்த்தகரீதியான 3ஜி அறிமுகம், டபிள்யூ-சிடிஎம்ஏ தரமுறையில் மொரீசியஸ் எம்டெல் நிறுவனத்தால் செய்யப்பட்டது. 2006 மார்ச் மாத பிற்பகுதியில் வட ஆப்ரிக்க மொராக்கோவில், ஒரு புதிய நிறுவனமான வனா நிறுவனத்தினால் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

Telus நிறுவனம் முதல்முறையாக 3ஜி சேவைகளை கனடாவில் 2005ல் அறிமுகப்படுத்தியது. 2007ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரோஜர்ஸ் விஷன் என்ற வடிவத்தில் கிழக்கு கனடாவில் ரோஜர்ஸ் வயர்லெஸ் நிறுவனம் 3ஜி எச்எஸ்டிபிஏ சேவைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. தற்போது ஃபிடோ சொலூசன்ஸ் மற்றும் ரோஜர்ஸ் வயர்லெஸ் நிறுவனங்கள் புறநகர் மையங்களில் மூன்றாம் தலைமுறை சேவைகளை அளித்து வருகின்றன.

ஒரு முன்னணி தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வரும் டி-மொபைல் நிறுவனம், சமீபத்தில் 120 அமெரிக்க நகரங்களில் தனது சேவையைக் கொண்டு வந்தது. இது 2009-ஆம் ஆண்டில் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு சேவைகளை வழங்கும்.

2008ல், மஹாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனத்தால் மூன்றாம் தலைமுறை செல்பேசி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா 3ஜி செல்பேசி துறையில் களம் இறங்கியது. எம்டிஎன்எல் நிறுவனம் தான் இந்தியாவில் 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் செல்பேசி சேவை வழங்கும் நிறுவனமாகும்.

3. வசதிகள்
3. 1. டேட்டா விகிதங்கள்


3ஜி சாதனங்கள் அல்லது அச்சேவை அளிப்போர்களிடம் இருந்து பயனர்கள் இந்தளவிலான டேட்டா விகிதத்தை எதிர்பார்க்கலாம் என்ற ஒரு தெளிவான வரையறையை இன்னும் ITU கொண்டு வரவில்லை. இவ்வாறு 3ஜி சேவையைப் பெற்ற பயனர்கள், ஒரு தரமுறையைக் குறிப்பிட்டு, இது குறிப்பிடும் விகிதத்தை இந்த தொழில்நுட்பம் எட்டவில்லை என்று கூறமுடியாது. ஒரு செய்தி விமர்சனம் குறிப்பிடுவதாவது: "IMT-2000 தொழில்நுட்பம் உயர்ந்த டிரான்ஸ்மிஷன் விகிதங்களை அளிக்கும்: அதாவது நிற்கும் அல்லது நடக்கும் பயனர்களுக்கு குறைந்தபட்சம் நொடிக்கு 2 மெகாபிட்ஸ் வேகத்திலும், நகரும் வாகனங்களில் நொடிக்கு 348 கிலோபிட்ஸ் வேகத்திலும் கிடைக்கும்" என்கிறது.குறைந்தபட்ச அல்லது சராசரி விகிதங்களையோ அல்லது எந்த மாதிரியான இன்டர்பேஸ்கள் 3ஜி சேவைக்கு பொருந்தும் என்றோ ITU தெளிவாக குறிப்பிடவில்லை, ஆகவே வாடிக்கையாளர்களின் பிராட்பேண்ட் டேட்டா எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு டேட்டா வேக விகிதங்கள் விற்கப்படுகின்றன.

3. 2. பாதுகாப்பு

3ஜி வலையமைப்புகள், அதற்கு முந்தைய 2ஜி சேவைகளை விட அதிகளவிலான பாதுகாப்பு வசதிகளைத் தருகிறது. பயனர் கருவி அது இணையும் வலையமைப்பில் அங்கீகரிக்கப்பட அனுமதிப்பதன் மூலம், பயனர் தாம் விரும்பும் வலையமைப்பில் தான் இருக்கிறோம், வேறு வலையமைப்பில் கிடையாது என்பதை உறுதிப்படுத்தி கொள்ள முடியும். 3ஜி வலையமைப்புகள் பழைய ஏ5/1 ஸ்ட்ரீம் சிப்பருக்கு பதிலாக KASUMI பிளாக் க்ரிப்டோக்களைப் பயன்படுத்துகின்றன. இருந்தாலும், KASUMI cipher-ம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

3ஜி வலையமைப்பு கட்டமைப்பு பாதுகாப்பிற்கும் கூடுதலாக, IMS போன்ற பயன்பாட்டு கட்டமைப்புகள் அணுகப்படும் போது முற்றுமுதலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, இருந்தாலும் இது முழுவதுமாக ஒரு 3ஜி தொழில்நுட்பத்தைச் சேர்ந்தது என்று கூறிவிட முடியாது.

4. இரண்டாம் தலைமுறையில் இருந்து பரிணாம வளர்ச்சி

2ஜி வலையமைப்புகள் குறிப்பாக குரலொலி சேவைகளுக்காகவும், குறைந்த டேட்டா டிரான்ஸ்மிஷன்களுக்காகவும் உருவாக்கப்பட்டவை.

4. 1. 2ஜி சேவையில் இருந்து 2.5 தலைமுறைக்கு

ஜெனரல் பேக்கட் ரேடியோ சேவை ஜிபிஆர்எஸ் அறிமுகத்துடன், 3ஜி சேவையின் பரிணாமத்தின் முதல் முக்கிய படி தொடங்கியது. ஆகவே ஜிபிஆர்எஸ் சேவையுடன் கூடிய செல்லுலர் சேவைகள் 2.5ஜி ''' என்றானது.

ஜிபிஆர்எஸ் நொடிக்கு 56 கிலோபிட்ஸ் முதல் 114 கிலோபிட்ஸ் வரையிலான டேட்டா விகிதங்களை அளிக்க கூடியதாகும். வயர்லெஸ் அப்ளிகேஷன் புரோட்டோகால் (WAP) அக்சஸ், மல்டிமீடியா மெசேஜிங் சேவை (MMS) போன்ற சேவைகளுக்கும், மின்னஞ்சல் மற்றும் இணைய பயன்பாடு போன்ற இணைய தொலைதொடர்பு சேவைகளுக்கும் ஜிபிஆர்எஸ் பயன்படுத்தப்படுகிறது. ஜிபிஆர்எஸ் டேட்டா பரிமாற்றம் பெரும்பாலும் பரிமாறப்பட்ட ஒரு மெகாபைட் டிராபிக்கிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் பாரம்பரிய சர்க்யூட் ஸ்விட்சிங் வழியாக நடக்கும் டேட்டா கம்யூனிகேஷன், கனெக்சன் நேரத்தின் ஒரு நிமிடத்திற்கு ஏற்ப, பயனரால் உண்மையில் திறன் பயன்படுத்தப்படுகிறதா அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறதா என்ற அடிப்படையில் பில் செய்யப்படும்.

4. 2. 2.5ஜி சேவையில் இருந்து 2.75ஜி (எட்ஜ்) வரை

ஜிபிஆர்எஸ் வலையமைப்புகள் 8PSK என்கோடிங் அறிமுகத்துடன் எட்ஜ் வலையமைப்பாக பரிணமித்தது. என்ஹேன்ஸ்டு டேட்டா ரேட்ஸ் ஃபார் ஜிஎஸ்எம் எவலூசன் (EDGE), என்ஹேன்ஸ்டு ஜிபிஆர்எஸ் (EGPRS), அல்லது ஐஎம்டீ சிங்கிள் கேரியர் (IMT-SC) என்பது பழைய தொழில்நுட்பத்திற்கு பொருந்த கூடிய டிஜிட்டல் மொபைல் போன் தொழில்நுட்பமாகும், இது மேம்பட்ட டேட்டா டிரான்ஸ்மிஷன் விகிதங்களை அனுமதிக்கிறது, ஜிஎஸ்எம் தரமுறைகளின் மேல் ஒரு விரிவாக்கமாக இது உருவாக்கப்பட்டது. எட்ஜ் தொழில்நுட்பம் 3ஜி ரேடியோ தொழில்நுட்பமாகவும், ITU -ன் 3ஜி பரிந்துரைகளின் ஒரு பாகமாகவும் கருதப்படுகிறது, ஆனால் பொதுவாக இது 2.75ஜி தொழில்நுட்பமாகவே குறிக்கப்படுகிறது. அமெரிக்காவில், சிங்குலர் நிறுவனத்தால் (தற்போது ஏடி&டி) 2003ன் தொடக்கத்தில் ஜிஎஸ்எம் வலையமைப்புகளில் எட்ஜ் நிறுவப்பட்டது.

ஜிஎஸ்எம் குடும்பத்தின் ஒரு பாகமாக 3GPP -ஆல் எட்ஜ் தரமுறைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் ஜிஎஸ்எம்/ஜிபிஆர்எஸ் வலையமைப்புகளின் திறனில் மூன்று மடங்கு மேம்படுத்தப்பட்ட திறனில் இதன் சேவை அளிக்கப்பட்டது. ஜிஎஸ்எம் டைம்ஸ்லாட்டுகளுக்குள்ளேயே, மிகவும் நவீன கோடிங் முறைகளுக்கு (8PSK) மாறியதன் மூலம் உயர்ந்த டேட்டா விகிதங்களை இந்த தொழில்நுட்பம் எட்டுகிறது.

5. 4ஜி நோக்கிய பரிணாமம்

3ஜி தரமுறைகளின் மேம்பட்ட விரிவாக்கத்தில் 3ஜிபிபி மற்றும் 3ஜிபிபி2 ஆகிய இரண்டும் தற்போது வேலை செய்து வருகின்றன, இவை முறையே 3ஜிபிபி நீண்ட கால பரிணாமம் மற்றும் அல்ட்ரா மொபைல் பிராண்ட்பேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளன. அனைத்து ஐபி வலையமைப்பு கட்டமைப்பின் அடிப்படையில், MIMO போன்ற நவீன வயர்லெஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த தொழில்நுட்ப குறிப்புகள் ஏற்கனவே 3ஜி சேவைக்கு அடுத்த கட்டமாக நவீன ஐஎம்டீ (4G) தொழில்நுட்பத்திற்கான நவீன பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன. இருந்தாலும், 4ஜி தொழில்நுட்பத்திற்கு தேவையான பேண்ட்விட்த் (நிலையான பயன்பாட்டிற்கு நொடிக்கு 1ஜிகா பிட்ஸ், மொபைல் பயன்பாட்டில் நொடிக்கு 100 மெகாபிட்ஸ்) குறைவாக இருப்பதால், இந்த தரமுறைகள் 3.9ஜி அல்லது ஆரம்பகட்ட-4ஜி தரமுறைகளாக குறிப்பிடப்படுகின்றன.

3GPP திட்டங்கள், நவீன எல்டீஈ 4ஜி இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், இந்நிலையில் LTE குடும்பத்திற்கு ஆதரவாக UMB-ன் அபிவிருத்திகளை குவால்காம் நிறுத்தி விட்டிருக்கிறது.

6. குறைபாடுகள்


உலகளவில் 3ஜி சேவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, 3ஜி சேவை அளிப்போர்களுக்கும், பயனர்களுக்கும் சில குறைபாடுகள் இருக்கின்றன:

* சில சட்டமுறைகளில் 3ஜி சேவை உரிமங்களுக்கான அதிகளவிலான உள்ளீட்டு கட்டணங்கள்
* நாடுகளுக்கு இடையிலான உரிம முறைகளில் இருக்கும் வேறுபாடுகள்
* சில தொலைதொடர்பு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள கடன் அளவு, இதனால் 3ஜி முதலீட்டிற்கு சிரமமாக இருக்கும்
* நிதி பிரச்சனையில் இருக்கும் ஆப்பரேட்டர்களுக்கு அரசு உதவி இல்லாமல் இருப்பது
* 3ஜி போன்களின் விலை
* சில பகுதிகளில் கவரேஜ் இல்லாமல் இருப்பது
* கையடக்க சாதனத்தில் பிராட்பேண்ட் சேவைகளின் தேவை
* 3ஜி போன்களுக்கான பேட்டரிகள்

அதிர்வெண் பகிர்வு



ஒரு செல்பேசிக்கும் ,அச்செல்பேசி இணைக்கப்பட்டிருக்கும் தள நிலையத்திற்குமிடையே எவ்வாறு பரிவர்த்தனை நிகழ்கிறது? தள நிலையத்திற்கும் செல்பேசிக்கும் எப்போதும் தொடர்பு இருக்குமா? தள நிலையம் ஒலிபரப்பும் அலைகளை எப்படி செல்பேசி பெறுகிறது? செல்பேசி அனுப்பும் தகவல்கள் எவ்வாறு தள நிலையத்திற்குப் போய்ச் சேருகின்றன? ஒரே நேரத்தில் பல செல்பேசிகள் எப்படி ஒரு தள நிலையத்துடன் தொடர்பு கொள்கின்றன? அவை அனுப்பும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாதா?  போன்ற சந்தேகங்கள் எப்போதாவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

ஜி எஸ் எம் இயங்கும் அலைவரிசை 900 மெகா ஹெர்ட்ஸ் . எல்லாத் தள நிலையங்களும் ஒரே அதிர்வெண்ணில் இயங்குவதில்லை.  அவ்வாறு எல்லாத் தள நிலையங்களும் ஒரே அதிர்வெண்ணில் இயங்கினால் எந்த நிலையத்துடன் எந்தச் செல்பேசி இணைக்கப்பட்டுள்ளது? எந்த செல்பேசிக்குத் தகவல் அனுப்பப்படுகிறது? என்பது குறித்துக் குழப்பங்கள் ஏற்படும். எனவே ஒவ்வொரு செல்லும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அலைபரப்பத் தீர்மானிக்கப்பட்டது.

ஜி எஸ் எம் - 900 அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிர்வெண் பட்டை 880 மெகா ஹெர்ட்ஸிலிருந்து 960 ஹெர்ட்ஸ் வரை. செல்பேசிகள் இயங்க ஒரு அதிர்வெண் பட்டை(Frequency band) ; தள நிலையங்கள் இயங்க ஒரு அதிர்வெண் பட்டை. தள நிலையங்களின்  அதிர்வெண் பட்டை 925 முதல் 960 மெகா ஹெர்ட்ஸ் வரை. செல்பேசி இயங்கும்   அதிர்வெண் பட்டை 880 முதல் 915 மெகா ஹெர்ட்ஸ் வரை.  அதாவது , தள நிலையங்களின் செலுத்திகள் (Transmitters) 920 முதல் 960 மெகா ஹெர்ட்ஸில் அலைகளை ஒலிபரப்பும். செல்பேசிகளில் இருக்கும் பெறுனர்கள் (Receivers)அந்த அலைவரிசையிலிருந்து வரும் அலைகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் . அதுபோல் செல்பேசிகளின் செலுத்திகள்  925 முதல் 960 மெகா ஹெர்ட்ஸ் வரை ஏதாவது ஒரு அதிர்வெண்ணில் அலைகளை ஒலிபரப்பும் . தள நிலையங்களின் பெறுனர் இந்த அதிர்வெண்களிலிருந்து வரும் அலைகளை ஈர்க்கும்.

தள நிலையங்கள் பரப்பும் அதிர்வெண் பட்டையைக் கவனிப்போம். 925 மெகா ஹெர்ட்ஸ் முதல் 960 மெகா ஹெர்ட்ஸ் வரை. மொத்தம் 35 மெகா ஹெர்ட்ஸ் அகலப்பட்டை. இந்தப்பட்டையானது 200 கிலோ ஹெர்ட்ஸ் கொண்ட சிறு சிறு பட்டைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு செல் ஒலிபரப்பும் அலைகள் 200 கிலோ ஹெர்ட்ஸ் அகலங் கொண்ட பட்டையாகும் (Bandwidth).  மொத்தம் 124  பட்டைகள் இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.  இம்முறைக்கு, அதாவது நமக்குப் பயன்படுத்த ஒதுக்கியுள்ள அதிர்வெண் பட்டையைப் பிரித்து ஒவ்வொரு
பரப்பியிற்கும்(Transmitter) ஒரு சிறு  அதிர்வெண் பட்டை வழங்கும் முறைக்கு அதிர்வெண் பகுப்பு பல்லணுகல் முறை (Frequencey Division Multiple Access , FDMA) என்று பெயர்.

இந்த முறையில் ஒவ்வொரு செல்லிற்கும் 200 கிலோ ஹெர்ட்ஸ் அகல அதிர்வெண் பட்டை வழங்கப்படுகிறது. அப்படியானால் மொத்தம் 124 பட்டைகள்தானே உள்ளன? 124 செல்களுக்கு மேல் இருந்தால் என்ன செய்வது என்கிறீர்களா?  இருக்கவே இருக்கிறது அதிர்வெண் மறு பயன்பாடு (Frequencey Re-use) முறை. சாதாரணமாய் நீங்கள் கவனித்திருக்கக் கூடும்; ஒரு பெரிய மாநகரத்தில் நிறைய பண்பலை வானொலிகள் (FM Radio) இருக்கும். ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் ஒரு அதிர்வெண் வழங்கப்படுகிறது.ஒரு பண்பலை வானொலி நிலையத்தின் அதிகபட்ச ஒலிபரப்பு தூரம் நூறு அல்லது நூற்றைம்பது கிலோமீட்டர்கள். சென்னையில் 88 மெகா ஹெர்ட்ஸில் ஒரு  பண்பலை வானொலி இருக்கிறது. அதே அலை வரிசையில் (88 மெகா ஹெர்ட்ஸில்) மதுரையில் ஒரு பண்பலை வானொலி அமைத்தாலும் , இரு வானொலி அலைகளும் ஒன்றோடொன்று மோதி இடையூறு ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இரு வானொலிகள் ஒலிபரப்பும் அலைகளின் திறன் நூறு கிலோமீட்டர்களுக்குள் அடங்கி விடும். இவ்வாறு ஒரே அதிர்வெண்ணை மீண்டும் பயன்படுத்திக் கொள்வதற்கு அதிர்வெண் மறுபயன்பாடு என்று பெயர்.

பண்பலை வானொலிகள் எவ்வாறு நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் அதிர்வெண்ணைத் திரும்ப உபயோகப் படுத்திக்கொள்ளுமோ, அதே போல செல்பேசித் தள நிலையங்களும் அதிர்வெண் பட்டையைத் திரும்பப் பயன்படுத்திக் கொள்கின்றன, ஆனால் பண்பலை வானொலி போல் நூறு கிலோமீட்டருக்கெல்லாம் ஒரு செல்லின் ஒலிபரப்பு திறன் இருக்காது.  நகரமாயிருந்தால் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள், கிராமமாயிருந்தால் சற்று அதிக தூரம், பத்துக் கிலோமீட்டர்கள் வரை.

இந்தப்  படத்தைப் பாருங்கள். அதில் F1 ,F2, F3 என்பதெல்லாம் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்ற தள நிலையங்கள் ஒலிபரப்பப் பயன்படுத்தும் அதிர்வெண்கள்(200 கிலொ ஹெர்ட்ஸ் அகலமுடையவை) . அதே அதிர்வெண்கள் மீண்டும் மற்ற செல்களிலும் பயன்படுத்துவதைக் காணலாம். அருகருகே உள்ள இரண்டு செல்களில் ஒரே அதிர்வெண் பயன்படுத்தப்படுதல் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் இடையூறுகள் தோன்றும் . எனவே , இடையூறு நிகழாவண்ணம் சற்றுத் தள்ளியுள்ள செல்களில் மீண்டும் ஒரு அதிர்வெண் பயன்படுத்தப் படலாம்.

F1 என்பது ஒரு செல்லில் அமைந்துள்ள தள நிலையம் பயன்படுத்தும் அதிர்வெண். இதை  ஊர்தி அதிர்வெண் (Carrier Frequency) என்று அழைக்கிறார்கள்.  ஒரு செல்பேசியானது ஒரு குறிப்பிட்ட செல்லுக்குள் வந்தவுடன் அந்தச் செல்லில் அமைந்துள்ள தள நிலையம் ஒலிபரப்பும் அதிர்வெண்ணுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த அலைகளை வாங்கிக் கொள்கிறது. அந்த செல்லிலிருந்து அருகிலுள்ள மற்ற செல்களுக்குச் செல்லுகையில் அந்தச் செல்லில் இருக்கும் தள நிலையங்கள் ஒலிபரப்பும் அதிர்வெண்ணுக்கு தனது வாங்கி (Receiver)யை மாற்றிக்கொள்கிறது.  இவ்வாறு, ஒரு தள நிலையத்திலிலிருந்து அடுத்த தள நிலையத்திற்குச் அதிர்வெண் மாற்றிக்கொள்ளும் செல்பேசியின் இப்பண்பை அதிர்வெண் தாவல் என்கிறோம்(Frequency Hopping).

சரி, செல்பேசிக்கு வருவோம். செல்பேசிகளின் செலுத்தி (Transmitter) இயங்கும் அலைவரிசைக்கு வருவோம். 880 முதல் 915 மெகா ஹெர்ட்ஸ் வரை செல்பேசிச் செலுத்திகள் பயன்படுத்தும் என்று பார்த்தோம். இந்த அலைவரிசைப்பட்டையும் 200 கிலோஹெர்ட்ஸ் அகலமுள்ள 124 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அப்படியானால் செல்பேசியானது எந்த அதிர்வெண்ணில் அலைகளை அனுப்பும்?

ஒரு செல்பேசியின் செலுத்தி இயங்கும் அதிர்வெண் அது தற்போது இணைந்துள்ள தள நிலையத்தைப் பொறுத்தது.  ஒரு தள நிலையம்  930  மெகா ஹெர்ட்ஸில் அலைகளை  அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதாவது தள நிலையத்தின் செலுத்தி 930 மெகா ஹெர்ட்ஸில் அலைகளை செல்பேசிக்கு அனுப்புகிறது. செல்பேசியின் பெறுனர் (Receiver) அந்த அதிர்வெண்ணுக்கு மாறி அலைகளைப் பெறுகிறது. செல்பேசியின் செலுத்தி இயங்கும் அதிர்வெண் , தள நிலையத்தின் அதிர்வெண்ணை விட  45 மெகா ஹெர்ட்ஸ் குறைவு.  எனவே செல்பேசி அனுப்பும் அலைகள் 895 மெகா ஹெர்ட்ஸில் இருக்கும்.   ஆக, தள நிலையம் இயங்கும் அதிர்வெண்  F1 என்றால் அத்தள நிலையத்திலுள்ள அனைத்துச் செல்பேசிகளும் அனுப்பும் அலைகளின் அதிர்வெண் F1 - 45 மெகா ஹெர்ட்ஸ்.

பொதுவாக இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கையில் இரண்டு வகையான முறையில் தகவல் பரிமாற்றம் நிகழலாம்.

ஒரு கருவி சமிக்ஞைகளை அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படும். மற்றொரு கருவி அதைப் பெற மட்டுமே முடியும், இம்மாதிரியான முறையை அகவோன் (Pager) பயன்படுத்துகிறது. இதனை  ஒருவழி முறை எனலாம் (Simplex mode) இரு கருவிகளும் தகவல்களை அனுப்பவோ, பெறவோ பயன்படுத்தப்பட்டால் அம்முறை இருவழி முறை (Duplex mode). இந்த இருவழி முறையிலும் இரண்டு உட்பிரிவுகள் :  ஒரே நேரத்தில் இரு கருவிகளும் தகவல்களை அனுப்பவோ பெறவோ முடிந்தால் அது முழுமையான இருவழி முறை(Full Duplex) ;  ஒரு நேரத்தில் முதல் கருவி தகவல்களை அனுப்பும், இரண்டாவது கருவி அதனைப் பெறும்; சற்று நேரம் கழித்து இரண்டாவது கருவி தகவல்களை அனுப்பும். முதல் கருவி அத்தகவல்களைப் பெறும். இம்முறைக்கு  அரை-இருவழி முறை என்று பெயர்(Half Duplex).

முழுமையான இரு வழி முறையைப் பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு கருவியில்  இருவழியாக்கி (Duplexer) எனும் பகுதி அவசியம். இது கொஞ்சம் இடத்தை அடைக்கும் சாதனம். இந்த இருவழியாக்கியின் வேலை என்ன? ஆன்டெனா வழியாக வரும் சமிக்ஞைகளையும் (Received Signals), ஆன்டெனாவுக்கு அனுப்பப் படும் தகவல்களையும்( Transmitted signals) ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல்  பிரித்து சரியான வகையில்  அலைபரப்பவோ/அலைபெறவோ உதவும் பணி இக்கருவிக்கு. தள நிலையங்களில் இக்கருவி அவசியம் தேவைப்படும். தள நிலையத்தில் இச்சாதனம் இடத்தை அடைப்பதில்லை, ஏனெனில் தள நிலையத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறிய பாகம்.

ஆனால் செல்பேசிக்குள் இதனை வைத்தால் செல்பேசியின் அளவு சற்றே பெரிதாகலாம். அப்படியானால் என்ன செய்யலாம்? இருவழியாக்கியை செல்பேசியில் பயன்படுத்த வேண்டாமென்றும் , ஒரே நேரத்தில் அனுப்புதல்/பெறுதல் தேவையில்லை என்றும் முடிவானது. தள நிலையத்திலிருந்து தகவல் பெற்றவுடன், சிறிது நேரம் கழித்தே செல்பேசி தனது சமிக்ஞைகளைத் தள நிலையத்திற்கு அனுப்பலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

Wednesday, February 2, 2011

PANGU

http://www.evanigam.com

Share Split என்றால் என்ன?




சென்ற பதிவில் Bonus Share மற்றும் அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பது பற்றி பார்த்தோம். இனி Share Split என்றால் என்ன, EPS-ல் அதனுடைய தாக்கம் என்ன என்பதை இந்த பதிவில் பார்போம்.

Bonus Share என்பது ஏற்கனவே நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் லாபத்தை பங்குகளாக முதலீட்டளர்களுக்கு தருவது, இதற்கு பணம் எதுவும் வாங்குவது இல்லை என்பதால் Bonus Share என்கிறோம். ஆனால் Bonus Share என்பது நடைமுறையை வைத்து பார்த்தல் அது இலவசமல்ல என்பதையும், குறுகிய கால முதலீட்டளர்களுக்கு லாபமில்லை என்பதையும் பார்த்தோம். Share Split என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான், ஆனால் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்த முகமதிப்பிற்கு பிரிப்பதைத்தான் Share Split என்கிறோம். உதாரணமாக ஒரு நிறுவன பங்கின் முகமதிப்பு Rs.10/- ஆக இருக்கிறது என்றால், அந்த முகமதிப்பை Re.1/- ஆக குறைத்து ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு இன்னும் 9 பங்குகளை நிறுவனம் கொடுக்கும் இதைத்தான் Share Split என்கிறோம். ஆக முன்பு பத்து ரூபாய் முகமதிப்பில் ஒரு பங்கு வைத்திருந்த ஒரு பங்குதாரர் இப்போது ஒரு ரூபாய் முகமதிப்பில் 10 பங்குகளை வைத்திருப்பார். பங்குதாரரை பொறுத்த வரை, முன்பு ஒரு பங்கு வைத்திருந்தவர் இப்போது பத்து பங்கு வைத்திருப்பார். ஆக, நமக்கு இது லாபம் தானே என்று எண்ணத்தோன்றும் - பணமே கொடுக்காமல் 9 பங்குகள் இலவசமாக கிடைத்தல் அது லாபம் என்று தான் எண்ணத்தோன்றும். ஆனால் இது லாபமுமில்லை, நஷ்டமுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே இருப்பதை பிரித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். சரி நிறுவனம் பிரித்திருக்கிறது, சந்தையில் பங்கின் விலையில் ஏதாவது மாற்றம் வருமா?

சந்தையிலும் பங்கின் விலை Split விகிதத்தின் படி குறைந்து விடும். உதாரணமாக சந்தையில் Rs.150/- விலையில் இருக்கும் ஒரு பங்கு, ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் Split ஆகிறது என்றால், ஒரு பங்கு பத்தாக பிரிகிறதல்லவா? அதைப்போல் ஒரு பங்கின் விலையும் Rs.15/- ஆகிவிடும்.

Texmaco Ltd. என்னும் நிறுவனத்தின் பங்குகள் பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்புக்கு குறைக்கப்பட்டது. 31-12-2008 அன்று Rs.737.10 ஆக இருந்த பங்கு, அடுத்தநாள் அதாவது Split ஆனதும் காலை சந்தையில் Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் ஆக ஆரம்பித்தது. அதாவது Rs.737.10 என்ற விலையில் விற்ற பங்கு, பத்தாக பிரிக்கப்படும் போது, அதன் விலையை பத்தால் வகுத்ததால் Rs.73.71 ஆகிறது. அடுத்த நாள் காலை கொஞ்சம் விலை கூடி Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் நடந்தது.

சரி இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் ஏன் Share Split செய்யப்படுகிறது? ஒரு பங்கின் விலை அதிகமாக இருந்தால் சிறு முதலீட்டாளர்கள் அந்த பங்கை வர்த்தகம் செய்வது எளிதல்ல என்பதால், Share Split செய்யப்படுகிறது. Bonus Share தருவதற்கும் இது ஒரு காரணம்.

சில நிறுவனங்கள் ஒரே நேரத்தில் Bonus Share மற்றும் Share Split இரண்டையும் கொடுக்கும். உதாரணமாக 2007 October இல் Jai Corporation Ltd. என்னும் நிறுவனம் ஒரு பங்கை பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்பிற்கு குறைத்தது. மேலும் 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. ஆக இந்த நிறுவனத்தில் ஒருவர் வாங்கியிருந்த ஒரு பங்கு 20 பங்குகளாக ஆகி இருக்கும் (1 பங்கு Split மூலமாக 10 ஆகும், அப்படி ஆன 10 பங்குக்கும் மேலும் 10 பங்குகள் Bonus ஆக கிடைக்கும்). Bonus மற்றும் Split ஆவதற்கு முந்தைய நாள் Jai Corporation Ltd.-இன் ஒரு பங்கின் விலை Rs.15,310/- ஆக இருந்தது. ஒரு பங்கு 20 பங்கு ஆகிறது என்பதால் விலையும் அதே அளவு குறையும் என்று பார்த்தோம். அதன்படி ஒரு பங்கின் விலை Rs.765.50 ஆக குறைந்திருக்கும். அடுத்த நாள் பங்கின் விலை கொஞ்சம் கூடி Rs.803.70/- ஆக இருந்தது. யோசித்து பாருங்கள், ஒரு சிறு முதலீட்டாளர் Rs.15,310/- கொடுத்து ஒரு பங்கு வாங்க முடியுமா? அப்படி அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரே பங்கில் போட்டு ஒரு வேளை அந்த பங்கின் விலை குறைந்தால் அவருடைய முதலீடு எல்லாம் அடிபட்டுப்போகும் ஒரு பெரிய risk இருகிறதே.. (Don't put all your eggs in single basket என்ற பழமொழியை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் - முதலீட்டின் அடிப்படி இது. குறிப்பாக பங்கு முதலீட்டுக்கு இதை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்) அதனால் Bonus மற்றும் Split ஆவதால் சிறு முதலீட்டாளர்கள் இப்படி பட்ட நிறுவன பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும். அப்படி நிறைய பேர் முதலீடு செய்வதால் பங்கின் விலை கூடும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பு உண்டு என்றுதான் சொல்கிறேனே தவிர, கண்டிப்பாக கூடும் உடனே அப்படி பங்குகளை வாங்குங்கள் என்று சொல்லவில்லை. ஒரு பங்கை வாங்கவேண்டும் என்று முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

Share Split ஒரு பங்கின் EPS-ஐ எவ்வாறு பாதிக்கறது என்று பார்போம். ஒரு நிறுவனம் 1,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனுடைய நிகர லாபம் Rs.20,000/- என்றால் ஒரு பங்கு சம்பாதித்த பணம் அதாவது EPS Rs.20/-. இதே நிறுவனம் பங்கின் முகமதிப்பை பத்து ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்தால் நிறுவனத்தின் மொத்த பங்குகள் 10,000 ஆகும் (1000 x 10). இப்போது நிகர லாபம் Rs.20,000/- என்பது 10,000 பங்குகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் - EPS Rs.2/- ஆகும். இருபது ரூபாயாக இருந்த EPS, Share Split-க்கு அப்புறம் இரண்டு ரூபாயாக குறைகிறது. ஆக லாப நஷ்ட கணக்கை பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருக்கிறது என்றதும், இந்த ஆண்டு நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லை என்று முடிவு செய்து விடக்கூடாது. Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா, Share Split ஆகி இருக்கிறதா என்பதை எல்லாம் கவனித்து முடிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவில் சில நிறுவனங்களை குறிபிட்டிருக்கிறேன். இவை எல்லாம் உதாரணத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டது. மற்றபடி இந்த பங்குகளை வாங்கவோ விற்கவோ பரிந்துரை செய்யவில்லை.

அடுத்து வரும் பதிவுகளில், ஒரு பங்கை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் முன் EPS-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்போம்.

EPS என்றால் என்ன?




இதுவரை லாப நஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்த்தோம். குறிப்பாக, Other Income (இதர வருமானம்), Extra ordinary Income, Operating profit, Interest (வட்டி), Net profit (நிகர லாபம்) மற்றும் EPS என்று சொல்லப்படும் ஒரு பங்கு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை ரூபாய் சம்பாதித்திருக்கிறது போன்றவற்றை கவனிக்க வேண்டும் என்று பார்த்தோம். இதில் EPS பற்றி இன்னும் விரிவாக பார்க்க வேண்டும்.

EPS பற்றி விரிவாக பார்க்கும் முன், நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்திற்கு இருக்கும் சொத்துக்கள், கடன் மற்றும் மூலதனம் பற்றிய விபரங்களை காட்டும். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்தின் நிதியாண்டின் கடைசி நாள் தேதியிட்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். வருடத்திற்கு ஒருமுறை வெளியிடுவது போல், 3 மாதத்திற்கு ஒருமுறையும் வெளியிடப்படும் (Quarterly Result). ஒரு நிதிநிலை அறிக்கை என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.

A. Sources Of Funds
A 1. Equity Share Capital
A 2. Reserves & Surplus
A 3. Networth
A 4. Secured Loans
A 5. Unsecured Loans
A 6. Total Debt
A 7. Total Liabilities

B. Application Of Funds
B 1. Gross Block
B 2. Less: Accum. Depreciation
B 3. Net Block
B 4. Capital Work in Progress
B 5. Investments
B 6. Inventories
B 7. Sundry Debtors
B 8. Cash and Bank Balance
B 9. Total Current Assets
B 10. Loans and Advances
B 11. Fixed Deposits
B 12. Total CA, Loans & Advances
B 13. Current Liabilities
B 14. Provisions
B 15. Total CL & Provisions
B 16. Net Current Assets
B 17. Miscellaneous Expenses
B 18. Total Assets

C. Book Value (Rs)

இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான, முதலீட்டாளர் அத்தியாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்றால் அது A3-இல் இருக்கும் Networth என்பது. பங்கு மூலதனம் (Share Capital) மற்றும் Reserves & Surplus இரண்டையும் கூட்டினால் வருவதுதான் Networth. Share Capital என்பது பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் இந்த நிறுவனம் பெற்றிருக்கும் முதலீடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். Reserves & Surplus என்றால் என்ன? நிறுவனங்கள் ஈட்டிய லாபம் அனைத்தையுமே பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுதுவிடுவதில்லை. லாபத்தில் ஒரு பகுதியை சட்டபூர்வமான ஒதுக்கீடு (Statutory Reserve) என்று ஒதுக்கி வைக்கும். மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன் படுத்த பொது ஒதுக்கீடு (General Reserve) என்று ஒரு தொகையை ஒதுக்கி வைக்கும். இந்த ஒதுக்கீடுகள் எல்லாம் போக மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு Dividend என்று வழங்கும். Dividend கொடுத்து போக மீதி இருக்கம் லாபத்தை லாப நஷ்ட கணக்கு (Accumulated Income) என்ற பெயரில் வைத்திருக்கும். இப்படி செய்யப்பட ஒதுக்கீடுகள் (Reserves) மற்றும் மீதமுள்ள லாபம் (Accumulated Income) அனைத்துமே Reserves & Surplus என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையில் பொறுப்புகள் இருக்கும் பகுதியில் காட்டப்படும். இவை அனைத்துமே Networth இல் சேர்க்கப்படும். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவில் Reserves & Surplus என்பதை Accumulated Income ஆக உதாரணப்படுத்தி இருக்கிறோம். அதாவது Share Capital என்பது பங்குதாரர்கள் செலுத்திய பணம், Reserves & Surplus என்பது நிறுவனம் சம்பாதித்த லாபத்தில் மீதமிருக்கும் பணம். ஒரு நிறுவனத்தில் முதலாளி என்பவர் பங்குதாரர்தான், அதனால் பங்குதாரர் பங்குக்கு செலுத்திய பணம் மற்றும் அந்த பங்குகளை வைத்து நிறுவனம் சம்பாதித்த Reserves & Surplus என்பது அனைத்துமே பங்குதாரர்களுக்கு தான் சொந்தம்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருந்தால் அதனுடைய Share Capital Rs.1,00,000. /- இந்த நிறுவனம் முதலாண்டில் Rs.20,000 லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் அதனுடைய EPS - அதாவது ஒரு பங்கின் சம்பாத்தியம் Rs.2/- (Net profit / Number of Equity Shares). இந்த நிறுவனம் 10% Dividend கொடுக்க முடிவு செய்திருக்கிறது (Dividend என்பது பங்கின் முகமதிப்பில் கணக்கிடப்படும்) Rs.10/- முகமதிப்புள்ள பங்குக்கு 10% என்றால் ஒரு ரூபாய் Dividend ஆக ஒவ்வொரு பங்குக்கும் கிடைக்கும். ஆக மொத்தமிருக்கும் 10,000 பங்குகளுக்கு ஒரு பங்குக்கு Re.1/- வீதம் Rs.10,000 Dividend ஆக கொடுக்கப்படும். நிறுவனத்தின் மொத்த லாபம் Rs.20,000 Dividend Rs.10,000 கொடுத்தது போக லாபத்தில் மீதம் Rs.10,000 இருக்கிறது. இது Reserves & Surplus இல் சேர்க்கப்படும். ஆக முதலாமாண்டு முடிவில் Dividend கொடுத்தது போக, நிறுவனத்தின் Networth என்பது Rs.1,10,000 ஆக இருக்கும். (Share Capital Rs.1,00,000/- மற்றும் Reserves & Surplus Rs.10,000 ஆக மொத்தம் Rs.1,10,000 Networth ஆக இருக்கிறது). ஆக ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு அதாவது Networth இன்று Rs.1,10,000 ஆகி இருக்கிறது. நிறுவனத்தின் Networth ஐ அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை கொண்டு வகுத்தால் ஒரு பங்கின் மதிப்பு என்ன என்பது தெரிய வரும், இந்த மதிப்பைதான் Book Value என்கிறோம். இதனைத்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிதிநிலை அறிக்கையில் கடைசியாக C-இல் குறிப்பிட்டிருக்கிறோம். அதாவது ஒரு பங்கின் மதிப்பு (Book Value) Rs.11 ஆக இருக்கிறது (1,10,000/10,000). ஒருவேளை இந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டால் அல்லது இந்த நிறுவனம் இனி நாம் தொழில் செய்யப்போவதில்லை அதனால் நிறுவனத்தை மூடிவிடுவோம் என்ற ஒரு முடிவு எடுத்தால், ஒவ்வொரு பங்குக்கும் Rs.11/- திருப்பி கொடுக்கும். அதாவது பங்கின் Book Value என்னவோ அதுதான் அந்த பங்கின் உண்மையான மதிப்பு அலல்து அகமதிப்பு (Intrinsic Value of a Share).

இந்த Book Value தான் பங்கின் சந்தை விலையா அல்லது இந்த Book Value-விற்கு தான் சந்தையில் பங்கு விற்கப்படுமா என்ற ஒரு கேள்வி வரலாம். இல்லை. சந்தை விலை (Current Markeet Price - CMP) என்பது எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எவ்வளவு வளரும் என்ற கணிப்பு, மற்றும் பொருளாதார நிலை, உலகசந்தை, அந்த பங்குக்கு சந்தையில் இருக்கும் Demand மற்றும் supply போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் Book Value என்பது இந்த நிறுவனத்தின் கடந்த காலத்தை கணக்கில் வைத்து நிர்ணயிக்கப்படுவது. Book Value என்பது ஏற்கனவே அடையப்பட்ட மதிப்பு, சந்தை விலை என்பது எதிர்காலத்தை மனதில் கொண்டு எதிர்பார்ப்பில் நிர்ணயிக்கப்படும் விலை. (இந்த Book Value விஷயத்தில் சத்யம் கம்ப்யூட்டர் விதிவிலக்கு, ஏனென்றால் அதனுடைய கணக்கியல் எவ்வளவு தூரம் சரி ஒரு இன்றுவரை ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது).

சரி Networth மற்றும் Book Value பற்றி தெரிந்துகொண்டோம். இனி Bonus Share விஷயத்துக்கு வருவோம். ஒரு நிறுவனம் Bonus Share எப்படி தருகிறது? நிறுவனத்தின் லாபத்தில் Dividend கொடுத்து போக மீதி இருக்கும் லாபத்தை Reserves & Surplus இல் வைத்திருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். அந்த Reserves & Surplus இல் இருந்துதான் Bonus Share கொடுக்கப்படும். நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட உதாரணத்தின் படி Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருக்கும், Share Capital Rs.1,00,000/- ஆக இருக்கும் நிறுவனம் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக தொழில் செய்து Reserves & Surplus இல் Rs.2,00,000/- வைத்திருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் Networth Rs.3,00,000/- ஆக இருக்கும். ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருக்கிறது. Reserves & Surplus இல் Rs.2,00,000/- இருப்பதால், பங்குதாரர்களுக்கு Dividend கொடுப்பதற்கு பதிலாக அதிலிருந்து Bonus Share கொடுக்கலாம் என்று நிறுவனம் முடிவு செய்து, 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு ஒரு பங்கு இலவசமாக கிடைக்கும். பங்குதாரரை பொறுத்த வரை பணம் கொடுக்காமல் ஒரு பங்கு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அது உண்மையிலேயே இலவசமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், Bonus Share கொடுத்த பிறகு நிறுவனத்தின் Networth மற்றும் Book Value எப்படி இருக்கிறது என்று பார்போம்.

Rs.10/- முகமதிப்பில் 20000 Share (நிறுவனம் வெளியிட்ட பங்குகள் 10000 மற்றும் bonus Share ஆக கொடுத்த பங்குகள் 10000 ஆக மொத்தம் 20000 பங்குகள்) என்பதால் Share Capital Rs.2,00,000/-. Reserves & Surplus Rs.2,00,000/- இருந்தது இதில் Rs.1,00,000/- bonus Share ஆக கொடுக்கப்படிருக்கிறது என்பதால் bonus Share கொடுத்த பிறகு Reserves & Surplus 1,00,000/- ஆக இருக்கும். ஆக இரண்டையும் கூட்டினால் Networth Rs.3,00,000/- ஆக இருக்கிறது. Networth இல் மாற்றமில்லை. ஆனால் பங்கின் Book Value என்ன? Rs.3,00,000/20000 பங்குகள் என்பதால் Book Value Rs.15/- ஆக இருக்கிறது. ஏற்கனவே Rs.30/- Book Value இருந்த பங்கின் இப்போதைய Book Value Rs.15/- மட்டுமே. Bonus Share கொடுக்கும் முன் நிறுவனம் மூடப்பட்டிருந்தால், ஒரு பங்குக்கு Rs.30/- கிடைத்திருக்கும். ஆனால் Bonus Share கொடுத்த பிறகு நிறுவனம் மூடப்பட்டால் ஒரு பங்குக்கு Rs.15/- தான் கிடைக்கும் ஆனால் பங்குதாரர் அவர் வைத்திருந்த ஒரு பங்குக்கு ஒரு பங்கு இலவசமாக பெற்றதால் அவர் இரண்டு பங்கு வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கு ஒரு பங்குக்கு Rs.15/- வீதம் 2 பங்குக்கும் சேர்த்து Rs.30/- கிடைக்கும். ஆக பங்குதாரருக்கு Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை. சரி இப்படி கணக்கு பார்த்தால் லாபமில்லை, Bonus Share கிடைத்த பிறகு பங்கு சந்தையில் பங்கின் விலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Bonus Share கொடுக்கும் முன் இந்த நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் Rs.50/- ஆக விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். Bonus Share கிடைத்த அன்றே சந்தையில் பங்கின் விலை, போனசு Share விகிதத்திற்கு குறைந்து விடும். 1:1 Bonus என்பதால், Rs.50 ஆக இருந்த பங்கின் விலை Rs.25/- (Rs.50/2) ஆக குறைந்து விடும். ஏன் இப்படி குறைகிறது? ஏற்கனவே ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருந்தது இப்போது பாதியாக குறைந்தது ஒரு காரணம். மேலும், Bonus Share கொடுப்பதற்கு முன் நிறுவனம் சம்பாதித்த நிகர லாபம் 10000 பங்குகளுக்கு மட்டுமே பிரிக்கப்படும், Bonus Share கொடுத்த பிறகு, அதே லாபம் 20000 பங்குகளுக்கு பிரிக்கப்படும். ஆக ஒரு பங்கின் வருமானம் (EPS) பாதியாக குறையும். இந்த காரணங்களால், bonus Share கொடுத்தும், சந்தையில் பங்கின் விலை உடனடியாக குறைகிறது. Bonus Share கிடைக்கும் முன் ஒரு பங்கை விற்று Rs.50/- கிடைக்குமென்றால் Bonus Share கிடைத்த பிறகு இரண்டு பங்கையும் விற்றால் தான் Rs.50/- கிடைக்கும். அதாவது Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை.

இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் எதற்கு அந்த Bonus Share?? ஆனால் ஒரு நிறுவனம் Bonus Share கொடுக்க போகிறது என்ற தகவல் வந்ததும் சந்தை முழுக்க அந்த நிறுவனம் பற்றி மிக பெரிதாக பேசிக்கொள்கிறார்களே ஏன்? எந்த லாபமும் இல்லாத ஒரு விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைக்கதோன்றும். Bonus Share கிடைப்பதால் குறுகிய கால முதலீட்டாளருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் நீண்ட கால முதலீட்டாளருக்கு கண்டிப்பாக லாபம் உண்டு. முதல் ஆதாயம் சந்தையில் பங்கின் விலை குறைவதால் அதிக முதலேட்டாளர்கள் நிறுவனத்தின் பங்கினை வர்த்தகம் செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்து Bonus கொடுக்கும் அளவு இந்த நிறுவனம் ஏற்கனவே லாபம் சம்பாதித்திருக்கிறது என்பது வெளி உலகுக்கு தெரிய வருவதால், அந்த நிறுவனத்தில் பங்கு வாங்கினால் எதிர்காலத்திலும் நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்து அதனால் பங்கின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வார்கள். அப்படி அதிக முதலீடு செய்ய ஆர்வம் உண்டாவதால் இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு Demand கூடி அதனால், பங்குகளின் விலை கூடும். உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு Rs.5400 விலையில் இருக்கும் போது, ஒரு பங்கு வைத்திருப்பவருக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. உடனே பங்கின் விலை Rs.1350 ஆக குறைந்தது. அதன்பின் பங்கின் விலை சுமார் Rs.2500 வரை கூடியது. அதாவது ஒரு பங்கு வைத்து மூன்று பங்கு Bonus ஆக பெற்ற ஒரு பங்குதாரர் தான் வைத்திருக்கும் 4 பங்குகளையும் விற்றால் அவருக்கு கிடைத்த பணம் Rs.10000. ஆக Bonus Share என்பது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் லாபம் தரும். மாறாக Bonus Share கிடைக்கப்போகிறது, நான் உடனே அதை விற்று லாபம் பார்த்து விடுவேன் என்று நினைத்து வாங்கினால் நிச்சயம் உடனடி லாபம் இல்லை. மேலும் Bonus Share என்பது கண்டிப்பாக இலவசமில்லை. ஏற்கனவே பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய Reserves & Surplus இல் இருந்து கொடுக்கப்படுவதுதான் Bonus Share. மற்றபடி Bonus Share நிச்சயமாக இலவசமில்லை. மேலும் Bonus Share கொடுப்பதால் எதிர்காலத்தில் EPS குறையும்.

ஆக ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் EPS-ஐ ஒப்பிட்டு பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருந்தால் உடனே இந்த நிறுவனம் சரி இல்லை என்று முடிவு செய்துவிடக்கூடாது. அவ்வாறு முடிவு செய்யும் முன், நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பங்கு வெளியிட்டிருக்கிறதா, Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் Share Split செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். Share Split என்றால் என்ன, அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்போம்.

லாப நஷ்ட கணக்குகளில் மேலும் கவனிக்க வேண்டியவைகள்




சென்ற பக்கத்தில் லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் சிலவற்றை பார்த்தோம். குறிப்பாக Operating Profit, Other Income மற்றும் Extra-ordinary Items பற்றி பார்த்தோம். இது மட்டுமில்லாமல் விற்பனை வருடா வருடம் கூட வேண்டும் என்றும் பார்த்தோம். அதேமாதிரி விற்பனை மட்டும் கூடினால் போதாது, அப்படி கூடும் விற்பனை லாபத்தையும் கூட்ட வேண்டும் என்றும் பார்தோம். இனி இந்த பக்கத்தில் வேறு என்னென்ன கவனிக்க வேண்டும் என்று பார்போம்.

லாபநஷ்ட கணக்கில் வட்டி (Interest) என்று ஒரு line item இருக்கும் (வரிசை என் 6-ல் உள்ளது : பார்க்க பாகம் 4). இது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் எவ்வளவு பணம் வட்டி செலுத்தியிருக்கிறது என்பதை குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் தொழில் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம், கிட்டத்தட்ட கடன் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்று கூட கூறலாம். ஆக கடன் இருந்தால் வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் குறைந்த அளவு வட்டி செலவு செய்திருக்கலாம், வேறுசில நிறுவனங்களோ சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வட்டிக்கே செலவிடலாம். நாம் ஏற்கனவே கூறியது போல் குறைந்தபட்சம் மூன்று வருட லாபநஷ்ட கணக்கை நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு வருடமும் வட்டிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி அதிகமா குறைவா என்று கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி குறைவாக இருக்கிறது என்றால் அந்த நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்தியிருக்கிறது என்று பொருள். இது ஒரு விதத்தில் நல்ல விஷயம்.

கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அந்த நிறுவனம் பணத்தை இரண்டு வழிகளில் ஏற்பாடு செய்யலாம். ஒன்று நல்ல லாபம் சம்பாதித்து லாபத்தில் வந்த பணத்தை வைத்து கடனை அடைத்திருக்கலாம் அல்லது புதிதாக பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடன்களை திருப்பி செலுத்தி இருக்கலாம். புதிதாக பங்குகளை வெளியிடாமல் (லாபத்தின் மூலம்) கடன்களை திருப்பி செலுத்தும் அளவு இந்த நிறுவனத்திடம் பணம் இருந்திருக்கிறது என்றால் அந்த நிறுவனம் நல்ல நிலையில் நடக்கிறது என்று அர்த்தம். நிச்சயமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நம் முதலீடு நன்கு வளரும் என்று நம்பலாம். (இதை மட்டுமே வைத்து முதலீடு செய்து விடக்கூடாது... முதலீடு செய்யலாம் என்பதற்கு சாதகமான அம்சங்களில் இதுவும் ஒன்று.) புதிதாக பங்குகளை வெளியிட்டு கடன்களை அடைத்திருக்கிறது என்றால் அதன் சாதக பாதகங்களை வரும் பதிவுகளில் கவனிப்போம்.

சில நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்திருக்கும் ஆனால் சம்பாதித்த லாபத்தில் பெரும்பகுதி வட்டிக்கு செலவாகி இருக்கும். இப்படி லாபத்தில் பெரும்பகுதியை வட்டி செலுத்த செலவிட்டால், முதலீடு செய்தவர்களுக்கு என்ன மிஞ்சும்? அல்லது முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தில் விகிதம் குறையத்தானே செய்யும்? அதனால் அதிக வட்டி செலுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ரொம்ப யோசித்து முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக சுபிக்க்ஷா சிக்கலில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. அதற்கு சுபிக்க்ஷாவின் கடனும் ஒரு முக்கிய காரணம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் வட்டிக்கு செலவிட்டு, நடப்பு முதலீடு என்று சொல்லப்படும் அன்றாட தேவைக்கான Working Capital-ல் பாதிப்பு வந்து சுபிக்க்ஷா இன்று மூடப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. ஆக அளவுக்கதிகமான வட்டி ஒரு எச்சரிக்கை மணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. சில நிறுவனங்கள் தொழில் விருத்தி செய்ய புதிதாக கடன் வாங்கியிருக்கும். அதாவது புதிதாக ஒரு தொழிற்கூடம் அமைக்க கடன் வாங்கியிருக்கலாம். தொழிற்கூடம் என்பதை ஒரு நாளில் கட்டி முடித்து அடுத்த நாளே உற்பத்தி செய்து பொருட்களை விற்பனை செய்துவிட முடியாது. நிறுவனம் இருக்கும் தொழிலை பொறுத்து கட்டுமானத்திற்கான காலம் ஆறு மாதமோ, ஒரு வருடமோ அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம். அதற்கு பிறகுதான் புதிய தொழிற்கூடம் உற்பத்தி ஆரம்பித்து விற்பனை கூடி அதன்மோலம் லாபமும் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும் முன்பும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும் - விற்பனை கூடி இருக்காது. இது நஷ்டதிற்கோ அல்லது குறைந்த நிகர லாபத்திற்கோ வழிவகுக்கலாம். எனவே வட்டி கூடியிருக்கிறது என்றதும், நிறுவனம் மோசம் என்று முடிவு செய்து விடாமல், நிறுவனம் சம்மந்தப்பட்ட செய்திகளை படித்துப்பார்த்து நாம் புரிந்துகொள்ளலாம். எங்கே தகவல் கிடைக்கும்? அனைத்து நிறுவனங்களும் தமது தொழில் சம்மந்தப்பட்ட தகவல்களை பங்குசந்தைக்கு கொடுக்க வேண்டும். அதனால் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்க்கலாம்.

ஆக விற்பனை கூடி இருக்க வேண்டும், Operating Profit கூடி இருக்க வேண்டும், Extra-ordinary Items பற்றி கவனிக்க வேண்டும், வட்டி செலவை கவனிக்க வேண்டும். லாபநஷ்ட கணக்கு என்பது இதை எல்லாம் கடந்துதான் நிகர லாபம் என்ற நிலையை அடைகிறது. நிகர லாபம் விற்பனையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். உதாரணமாக சென்ற ஆண்டு விற்பனை 1,000 ரூபாயாக இருந்து நிகர லாபம் (Net Profit) 200 ரூபாய இருந்தால் நிகர லாபம் (Net Profit Ratio) 20 சதவிகிதம் என்று சொல்கிறோம் (200/1000x100). ஒவ்வொரு வருடமும் இந்த Net Profit Ratio என்பது கொஞ்சமாவது கூட வேண்டும். கூடாவிட்டாலும் குறையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நிகர லாபம்தான் முதலீட்டளர்களுக்கான லாபம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை தான் முதலீட்டளர்களுக்கு நிறுவனம் Dividend என்ற பெயரில் வருடா வருடம் கொடுக்கும். மேலும் ஒரே தொழிலில் இருக்கும் இரண்டு வெவ்வேறு நிறுவங்களின் Net Profit Ratio-வை ஒப்பிட்டு பார்த்து இரண்டில் எந்த நிறுவனத்தின் Ratio அதிகமோ அந்த நிறுவனம் நன்றாக இயங்குகிறது என்று முடிவுக்கு வரலாம். இந்த ஒப்பீடு ஒரு வருடத்தை மட்டும் வைத்து செய்யாமல் குறைந்தபட்சம் 2 நிறுவனங்களின் 2 ஆண்டு கணக்கை வைத்து பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஒப்பிடுதல் (Comparison), Ratio கணக்கிடுதல் இவையெல்லாம் நிறுவனத்தின் லாபம் சம்பாதிக்கும் திறனை நாம் உணர்ந்துகொள்ள உதவும்.

இனி லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பகுதிக்கு நாம் வருகிறோம். அதுதான் EPS என்ற Earning Per Share என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், ஒரு பங்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சொல். EPS பற்றி பேச நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பதிவில் EPS பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன்.

அதற்குமுன் இதை படிக்கும் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு பங்கு வாங்குமுன் இவ்வளவு விஷயங்கள் பார்க்க வேண்டுமா என்று தோணலாம். பங்கு சந்தை முதலீடு என்பது நான் ஏற்கனவே கூறியதுபோல், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் நமக்கு வருமானத்தை கொடுக்கும். அதனால் அடிப்படையில் நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுத்து வாங்கினால் நல்ல வருமானம் பார்க்க அதிக வாய்ப்பு உண்டு. நண்பர் திரு.சதுக்கபூதம் அவர்கள் என்னுடைய ஒரு பதிவிற்கு கீழ்க்கண்ட பின்னூட்டத்தை கொடுத்திருந்தார்.

//தற்போது இடை தரகர்கள் மற்றும் சிலர் உள் நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. செயற்கையான விலை ஏற்றத்திற்கு இது போன்ற செய்தி தாள்களை உபயோக படுத்துகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்//

மேற்கண்ட முன்னூட்டம் இன்றைய சில தரகர்கள் மற்றும் சிலரின் தவறான நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது (அனைத்து தரகர்களுமே தவறாக வழிகாட்டுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது). இந்த மாதிரி தவறான வழிகாட்டுதல்களை தவிர்க்க, நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்க நாம் நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் முதலீடு செய்ய வேண்டும். லாபம் சம்பாதிப்பதுதான் பங்கு சந்தை முதலீட்டின் ஒரே குறிக்கோள் என்றாலும், அதைவிட முக்கியமாக முதலீடு அழிந்து போகாமல் இருக்க வேண்டுமே...!!! அதற்க்காக இப்படி நிறைய விஷயங்களை அலசி பார்த்து, அடிப்படையில் வலுவாக இருக்கும் நிறுவனங்களின் (Fundamentally Strong Companies) பங்குகளை வாங்கினோமானால் நம் முதலீடும் பாதுகாப்பானதாக இருக்கும், வருமானமும் நன்றாக இருக்கும். எனவே நாம் ஏற்கனவே கூறிய விஷயங்களை எல்லாம் கவனித்தே ஆகவேண்டும்.

பங்கு வியாபாரத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை




லாப நஷ்ட கணக்கு என்பது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு விற்பனை செய்திருக்கிறது, என்னென்ன செலவுகள் செய்திருக்கிறது மொத லாபம் என்ன, நிகர லாபம் என்ன போன்ற விஷயங்களை கொண்டிருக்கும். வழக்கமாக லாப நஷ்ட கணக்கு வருடத்திற்கு ஒருமுறை அதாவது 12 மதங்களுக்கான கணக்காக இருக்கும். பங்கு சந்தையில் பதிவு செயயப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் வருடாந்திர கணக்கை பங்கு சந்தைக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் லாப நஷ்ட கணக்கை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு ஒரு விதிமுறை பங்குசந்தையில் இருக்க காரணம் முதலீட்டாளர்கள் தாங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

லாப நஷ்ட கணக்கு எனபது அந்த நிறுவனத்தில் லாப நஷ்டத்தை பற்றிய குறிப்பு என்றால் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) என்பது குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நிறுவனத்தின் சொத்து எவ்வளவு, அந்த நிறுவனத்தின் பொறுப்பு அல்லது அந்த நிறுவனம் கொண்டிருக்கும் கடன்கள் எவ்வளவு என்பதை குறிக்கும் ஒரு statement. ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் நிறுவனம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும். உதாரணமாக 2007-2008 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.௨008 தேதியிட்டு சமர்பிக்க பட்டிருக்கும். அதேபோல் 2008-2009 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.2009 தேதியிட்டு சமர்பிக்கப்படும். இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைக்கும் இடைப்பட்ட 12 மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை குறிப்பதுதான் லாப நஷ்ட கணக்கு. இதுமட்டுமின்றி பணம் எந்த வழியில் வந்தது அது எப்படி எல்லாம் செலவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதை Cash Flow statement என்று அழைக்கிறோம். ஆக, நிறுவனம் 3 விதமான அறிக்கைகள் சமர்பிக்கிறது.

1. லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account)
2. நிதிநிலை அறிக்கை (Balance Sheet)
3. Cash Flow Statement

முதலில் லாப நஷ்ட கணக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பதை பார்ப்போம். ஏற்கனவே கூறியதுபோல் லாப நஷ்ட கணக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் லாபம் சம்பதிததா அலல்து நஷ்டமடைந்திருக்கிறதா என்பதை குறிக்கும். நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்கு என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.

1. Sales
2. Operating Expenses
3. Operating Profit (1-2)
4. Other Income
5. NPBDIT (Net Profit Before Depreciation, Interest and Tax) (3+4)
6. Interest
7. NPBDT (Net Profit Before Depreciation and Tax) (5-6)
8 . Depreciation
9. NPBT (Net Profit Before Tax) (7-8)
10. Extra-ordinary items - Profit / Loss
11. NPBT (Net Profit Before Tax - post extra-ordinary items) (9 and 10)
12. Tax 13. NPAT (Net Profit After Tax)/Reported Net Profit (11-12)
14. Earning per Share (EPS)

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? முதலில் இந்த நிறுவனம் லாபத்தில் இருக்கிறதா அலல்து நஷ்டத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வரிசை எண் 13-ஐ பார்க்க வேண்டும், இந்தி பார்த்தால் நமக்கு அந்த நிறுவனம் எவ்வளவு நிகர லாபம் சம்பாதித்திருக்கிறது என்று தெரியும். ஆனால் இதை மட்டுமே வைத்து, லாபத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா என்றால் சரி என்று சொல்வதற்கு முன் இன்னும் நிறைய விஷயங்களை பார்க்க வேண்டும். எந்த ஒரு நிறுவனத்தின் லாபத்தை பற்றி நாம் ஒரு கணிப்புக்கு வர வேண்டும் என்றால் ஒரு வருட லாபத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய கூடாது. மேலும் நிகர லாபத்தை மட்டும் பார்ப்பதை விட Operating Profit ஐ பார்க்க வேண்டும். operating Profit என்றால் என்ன? அந்த நிறுவனம் செய்யும் விற்பனையில் செலவுகளை கழித்த பிறது வரும் லாபத்தை operating Profit என்கிறோம். தேய்மானம், வட்டி மற்றும் வருமானவரி போன்றவற்றை கழிக்கும் முன் இருக்கும் லாபம்தான் Operating Profit. குறைந்தபட்சம் மூன்று வருட லாப நஷ்ட கணக்கை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறு ஒப்பிடும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? அந்த நிறுவனத்தின் விற்பனை (sales) வருட வருடம் கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு நிறுவனம் என்பது வருடா வருடம் வளர வேண்டும். வளர்ச்சி என்பது விற்பனையில் தெரிய வரும். விற்பனை கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு கூடும் விற்பனை லாபத்தை கூட்டுகிறதா என்று கவனக்க வேண்டும். விற்பனை கூடினால் லாபம் கூடத்தானே வேண்டும் என்று நமக்கு தோணலாம். ஆனால் சில நிறுவனங்கள் விற்பனையை கூட்டினாலும் விற்பனை விகிதத்தை விட செலவு விகிதம் கூடி இருந்தால் லாபத்தை பாதிக்கும்.

உதாரணமாக சென்ற வருட விற்பனையில் 80% செலவு ஆகி இருக்கிறது என்றால் விற்பனையில் 20% லாபமாக இருக்கும். அதே நிறுவனம் இந்த ஆண்டு விற்பனையை இரண்டு மடங்காத கூட்டி இருக்கிறது என்றால், லாபமும் இரண்டு மடங்காக கூடி இருக்க வேண்டும். கீழே இருக்கும் உதாரணத்தை பார்த்தால் இந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

Year 1

1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40

Year 2

1. Sales 400
2. Operating Expenses 350
3. Operating Profit (1-2) 50

மேலே இருக்கும் உதாரணத்தில், நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டில் லாபம் கூடி இருக்கிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது தெரியும். ஆனால் இந்த நிறுவனம் உன்ன்மையிலேயே லாபத்தை கூட்டி இருக்கிறதா? இந்த நிறுவனம் முதலாண்டு Rs.200 விற்பனை செய்து Rs.40 ஐ வருமானமாக அடைந்திருக்கிறது. அதாவது விற்பனையில் 20% லாபம் (40/200x100). இரண்டாம் ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை Rs.400 ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விற்பனை உயர்ந்திருப்பதால் அந்தன் லாபமும் கூட வேண்டும். லாபம் Rs.50 ஆக இருக்கிறது. அதாவது உயர்ந்திருக்கிறது - ஆனால் இந்த நிறுவனம் முதலாண்டை விட இரண்டாம் ஆண்டில் சரிவில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் அப்படி? முதலாம் ஆண்டில் விற்பனையில் 20% லாபமாக சம்பாதித்த நிறுவனம் இரண்டாம் ஆண்டில் அதே அளவு விகிதத்தில் Rs.80 லாபமாக சம்பாதித்திருக்க வேண்டும் (Rs.400 x 20% = Rs.80), ஆனால் Rs.50 மட்டுமே லாபம் சம்பதிதிருக்கிறது. ஏன் இடந்த வித்தியாசம்? செலவு அதிதமாகி இருக்கிறது. முதலாண்டில் Rs.200 க்கு Rs.160 செலவு என்றால் இரண்டாம் ஆண்டு விற்பனை இரண்டு மடங்கு ஆகும்போது செலவும் இரண்டு மடங்காகி Rs.320 தான் இருக்க வேண்டும், ஆனால் செலவு Rs.350 ஆக உயர்ந்திருக்கிறது. செலவில் Rs.30 கூடியதால் அந்த அளவு லாபம் குறைந்துவிட்டது. ஆக இரண்டாம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் செலவுகள் கூடி லாபத்தை குறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிறுவனத்தால் செலவை கட்டுப்படுத்த முடியவில்லை, விற்பனையை மட்டும் கூட்டினால் போதாது, விற்கும் பணத்தை செலவுகளை கட்டுக்குள் வைத்து லாபமாக மாற்ற இந்த நிறுவனத்தால் முடியவில்லை என்பதால், இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் நம் முதலீடு எப்படி வளரும்?? ஆக லாப விகிதத்தை operating Profit ஐ முதலில் கவனிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் என்பது உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல், மூன்று முதல் ஐந்து ஆண்டு லாப நஷ்ட கணக்கை கவனிக்க வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, வரிசை எண் 10 இல் இருக்கும் Extra-ordinary items. சில நிறுவனங்களில் லாப நஷ்ட கணக்கில் இது இருக்கும். முதலில் Extra-ordinary items என்றால் என்ன என்று பார்போம். நிறுவனத்தின் வழக்கமான செயல்பாட்டின் மூலம் சம்பாதிக்காத வேறு விதமான வருமானங்களை Other Income என்னும் வரிசை எண் 4 இல் சேர்க்கலாம். உதாரணமாக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தன்னிடம் இருக்கும் உபரி ரொக்க பணத்தை வங்கியில் Deposit செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி, Other Income இல் சேரும். ஆனால் ஒரு நிறுவனம் தன்னிடம் இருந்த ஒரு தொழிற்கூடத்தை அல்லது தன்னிடம் இருந்த தொழிலில் ஒரு பகுதியை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபம் Extra-ordinary items ஆக கருதப்படும். வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி வருடா வருடம் கிடைக்க கூடியது, ஆனால் பிற இரண்டும் அப்படி இல்லை. ஒரு முறை மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இன்னொரு உதாரணம் நிறுவனம் தொழில் விஷயமாக வேறு யார் மேலாவது வழக்கு போட்டு அந்த வழக்கில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்து அந்த தீர்ப்பின் மூலம் கிடைக்கும் நஷ்டஈடு Extra-ordinary items இல் வருமானமாக கருதப்படும். அதே போல் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்தால் அதுவும் Extra-ordinary items இல் செலவாக கருதப்படும். இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், Other Income வேறு Extra-ordinary items வேறு என்பது. Other Income என்பது நிறுவனம் செய்யும் தொழில் சார்ந்த இதர வருமானங்கள். Extra-ordinary items எதேச்சையான, வருடா வருடம் நடக்காத ஒரு விஷயத்தால் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம்.

Year 1

1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40
Extra-ordinary Income - Net Profit 40

Year 2

1. Sales 400
2. Operating Expenses 420
3. Operating Profit (1-2) (20)
Extra-ordinary Income 120
Net Profit 100

இந்த உதாரணத்தில், நிகர லாபம் (Net Profit) இரண்டாம் ஆண்டில் நன்கு கூடி இருக்கிறது. நிகர லாபத்தை மட்டும் பார்த்தால் நிறுவனம் மிக நன்றாக செயல்பட்டு லாபம் சம்பாதிப்பது போல் தெரியும். விற்பனை முதலாம் ஆண்டை விட இரண்டாம் ஆண்டில் இரண்டு மடங்காக ஆகி இருக்கிறது, ஆனால் நிகர லாபம் (Net Profit) இரண்டு மடங்குக்கு மேல் இருக்கிறது, இது மிக நல்ல நிறுவனம் என்று முடிவு செய்யத்தோன்றும். முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியது Extra-ordinary items. இதில் Extra-Ordinary Income என்று ஒரு (line Item) Rs.120 இருக்கிறது. நிகர லாபம் Rs.100. இதிலிருந்து Extra-Ordinary Income ஆன Rs.120 ஐ கழித்தால் மிஞ்சுவது Rs.20 நஷ்டம்...!!! ஆக முதலாண்டை விட இரண்டாமாண்டு இந்த நிறுவனம் செயல்பாடு மோசமாகி, நஷ்டத்தில் இருக்கிறது, எனவே இந்த நிறுவன பங்கில் முதலீடு செய்வது சரி அல்ல என்று நாம் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் Extra-Ordinary items என்பது வருடா வருடம் கிடைக்கப்போதும் லாபம் அல்லவே. (Extra-Ordinary items இல் நஷ்டம் இருந்தாலும், அதை விலக்கி விட்டு அதன் பிறகே நிறுவனத்தின் செயல்பாடு பற்றி முடிவு செய்ய வேண்டும்)

நிறுவனங்களில் லாபநஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை எங்கே கிடைக்கும்? எப்படி பார்ப்பது என்று யோசிப்பவர்கள் கீழே இருக்கும் வலைத்தளங்களில் நுழைந்தால் தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைக்கும்,
http://www.moneycontrol.com

http://economictimes.indiatimes.com

http://www.indiabulls.com

http://www.bseindia.com


இது மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்கள் லாபநஷ்ட கணக்கில் பார்க்க வேண்டும். அவை பற்றி கீழ் கண்ட சுட்டியை தட்டி தெரிந்து கொள்ளுங்கள்!

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி?



முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.

பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.

1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்

1. நீண்ட கால முதலீடு (Long-term Investment) : ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால், அந்த நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைதான் செய்வார்கள். பணத்தை முதலீடு செய்துவிட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் காத்திருப்பார்கள். மூன்று வருடம் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலம் இல்லை. அது மூன்று வருடமாக இருக்கலாம் அலல்து அதற்கு மேலும் இருக்கலாம். சிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக இன்போசிஸ் நிறுவன பங்கில் 2002-ல் ஒரு பங்குக்கு 458 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2007 இல் 2337 ரூபாய் கிடைத்திருக்கும் - யோசித்து பாருங்கள் நான்கு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்க கீழே உள்ள ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. குறுகிய கால முதலீடு (Short, Medium-term Investment) : இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றமாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள்.

3. தின வர்த்தகம் (Day trading): இந்த முறையில் தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு - நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு - அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கி, வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் லாபம் பார்பார்கள். இது மிக மிக ரிஸ்க் ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் நாம் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே ரிஸ்க் அதிகமோ அங்கே லாபம் (return) அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இப்படி மூன்று வகையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம் என்று இருக்கும் போது எது நல்லது என்ற கேள்வி வரும். நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.

நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில்trading என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

முதலில் நீங்க என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்...!! பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஓன்று. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எப்படி நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வது? இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இன்போசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது என்பது போல், நாம் வாங்க நினைக்கும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தொழிலின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய சூழ்நிலையில் மென்பொருள், ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும் என்று நமக்கு தெரியும். அதே மாதிரி, உள்கட்டமைப்பு, பவர் மற்றும் FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் தொழில் அதிக பாதிப்புக்குள்ளாகாது என்று சொல்லப்படுகிறது.

இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கையில் நாம் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை கீழ்கண்ட சுட்டியை தட்டி தெரிந்துகொள்ளுங்கள்.

பங்குகள் - வாங்குவதும் விற்பதும்




இதுவரை பங்கு என்றால் என்ன என்று பார்த்தோம், இனி பங்குகளை வாங்கி விற்பதற்கு தேவையான சில அடிப்படை விஷயங்களை கவனிப்போம்.

ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டதும் அதை வாங்கிய பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு பங்கு பத்திரம் (share certificate) (share certificate number) இருக்கும். ஆக ஒவ்வொரு பங்குதாரரும் தான் வாங்கிய பங்குக்கு ஒரு பங்கு பத்திரம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பங்குக்கும் ஒவ்வொரு பத்திரம் என்று இல்லாமல் ஒரு நபர் எத்தனை பங்கு வாங்கியிருக்கிறார் என்பது பங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனமும் பங்குதாரர் பதிவேடு (shareholders register) வைத்திருக்கும். அதில் பங்கு பாத்திரத்தின் எண், அதை வாங்கியவரின் பெயர், முகவரி, அவர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை இப்படி அந்த பங்கு பத்திரம் மற்றும் பங்குதாரர் பற்றிய விபரங்கள் அனைத்தும் இருக்கும்.

பங்கு வாங்கியவர் பங்குகளை விற்கவேண்டும் என்றால், அந்த பங்கு பத்திரத்தின் பின்புறம் பங்கை விற்பவரும் அவரிடமிருந்து பங்கு வாங்குபவரும் கையொப்பமிட வேண்டும். கையொப்பமிடப்பட்ட பங்கு பத்திரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். அதன் பிறதுதான் புதிதாத வாங்கியவரின் பெயருக்கு பத்திரம் மாறும். இதில் நிறைய நடைமுறை சிக்கல் இருந்தது. உதாரணமாக, பங்கு விற்றவரின் கையொப்பம் சிறிது வித்தியாசமாக இருந்தாலும் இந்த விற்பனை செல்லாது என்று நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் எல்லாம் சரியாக இருந்தாலும், நிறுவனத்திற்கு கையொப்பமிட்ட பத்திரத்தை தபாலில் அல்லது courier

இப்போதும் நிறுவனம் பங்குதாரர் பதிவேடு வைத்திருக்கிறது, ஆனால் பங்கு பத்திரத்தை அச்சடித்து கொடுப்பதற்கு பதிலாக "Dematerialization" என்று அழைக்கப்படும்"Demat" முறை வந்து விட்டது. இந்த முறைப்படி, பங்கு அச்சடிக்கும் வேலை எல்லாம் இல்லை. எலக்ட்ரானிக் முறைப்படி பங்குகள் அனைத்தும் கணினி மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இப்படி பங்குகள் கணினி மூலமாக இருப்பதால் நாமும் Demat account என்று சொல்லப்படும் DematDemat accountதொடங்கப்படும். Demat account தொடங்கிய பின் நம்முடைய Demat ஐ வைத்து கணினி மூலமாக நாமே நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இங்கே நாம் நேரிடையாக என்று குறிப்பிடுவது புரோக்கரிடம் சொல்லி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், விற்பவருக்கும் வாங்குபவருக்கும் கிட்டத்தட்ட நேரடி தொடர்பு போல் ஒரு வித செயல்பாட்டின் மூலம் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

"BSE", "NSE" என்றெல்லாம் தொலைக்காட்சியிலோ பத்திரிக்கையிலோ நீங்கள் தினமும் பார்த்திருப்பீர்கள். நாம் Demat account ஆரம்பித்த பின், நம்முடைய Demat மூலமாக மும்பை பங்கு சந்தை என்று சொல்லப்படும் BSENSE ஆகிய இரண்டு பங்கு சந்தைகளிலும் நாம் நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வாங்கி இரண்டே நாளில் நம்முடைய Demat-ல் நாம் வாங்கிய பங்கு வரவு வைக்கப்படும். Demat என்பது நம்முடைய வங்கி கணக்கு மாதிரிதான். நம்முடைய வங்கி கணக்கில் நாம் பணம் செலுத்தினால், நம் கணக்கில் எப்படி வரவு வைக்கப்படுகிறதோ அதே மாதிரி தான் Demat-ம். நாம் வாங்கிய பங்குகள் வரவு வைக்கப்படும், வாங்கிய பங்குகளை விற்றால் நம்முடைய Demat

ஆக இன்றைய சூழ்நிலையில் Demat இருந்தால்தான் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த Demat account எப்படி ஆரம்பிப்பது? Demt ஆரம்பிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு பங்கு புரோக்கரை அணுக வேண்டும். உதாரணமாக ICICI, Kotaksecurities, Indiainfoline, Indiabulls இப்படி நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டால் Demat ஆரம்பிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்களே முடித்து தருவார்கள். நாம் ஒரு புரோக்கரிடம் Demat ஆரம்பித்தால் அதில் அவர்களுக்கு என்ன லாபம்? எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லையே..! நாம் Demat ஆரம்பித்தால் வருடா வருடம் Demat கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மிடம் வசூலிப்பார்கள். இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை நாம் அந்த Demat மூலமாக பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் நாம் வாங்கிய அல்லது விற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நம்மிடம் புரோக்கர் கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணங்கள் ஒவ்வொரு புரோக்கருக்கும் மாறுபடும். அதனால் Demat ஆரம்பிக்கும் முன் கட்டண விஷயங்களை விசாரித்துப் பார்த்து அதன் பிறகு எந்த புரோக்கர் என்று முடிவு செய்து Demat ஆரம்பிப்பது நல்லது.

இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை கீழ்கண்ட சுட்டியை தட்டி தெரிந்துகொள்ளுங்கள்.
கொடுக்கும். நாம் படித்து வாங்கும் பட்டம் போலவே பங்கு பத்திரமும் அச்சடித்து கொடுக்கப்படும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் வரிசை எண் மூலமாக அனுப்பி, அதை நிறுவனம் பெற்றுக்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து, பங்குதாரர் பதிவேட்டில் பங்கு உரிமையாளர் பெயர் மாற்றி பங்கு பத்திரத்தை திரும்ப அனுப்பித்தர நிறைய நாட்கள் ஆகும். மேலும் ஒருவர் பங்கு வாங்க வேண்டும் என்றாலும் விற்க வேண்டும் என்றாலும் புரோக்கரிடம் சொல்லிவைத்து அவர்கள் விரும்பிய விலையில் பங்கு பரிவர்த்தனை நடைபெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. புரோக்கர் மனது வைத்தால் நல்ல விலையில் பங்கு நமக்கு கிடைக்கும் என்று புரோக்கரை பிரதானமாக நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்படி பட்ட நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இப்போது இல்லை. கணக்கை தொடங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு முறை புரோக்கரை தொடர்பு கொண்டு சில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தோமென்றால் நம் பெயருக்கு மற்றும் தேசிய பங்கு சந்தை என்று சொல்லப்படும் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

பங்கு என்றால் என்ன?




ஒரு தொழில் நடத்த முதலீடு வேண்டும். அந்த முதலீட்டை ஒருவரே செய்தால் அவரை உரிமையாளர் என்கிறோம். அதாவது அந்த தொழிலில் இருந்து வரும் லாப நஷ்டங்கள் அவர் ஒருவரையே சேரும். இதை "Proprietorship" என்கிறோம். அதே முதலீட்டைஇரண்டு அல்லது மூன்று பேர் சேர்த்து செய்தல் லாப நஷ்டங்கள் அதனை பங்குதாரரையும் சேரும். இதை "Partnership" என்கிறோம்.

மேலே சொன்ன முறையில் பெரிய அளவிலான மூலதனத்தை திரட்டுவது கஷ்டமான காரியம். உதாரணமாக ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வது என்பது இயலாத காரியம். ஆக நிறய முதலீடு தேவைப்படும் தொழில் என்றால் அதுக்கு பணத்தை நிறைய பேரிடம் முதலீடாக வாங்கி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்க படுகிறது. அப்படி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்கும் போது, முதலீட்டை சிறு சிறு பாகங்களாக பிரித்து (பங்கு) ஒவ்வொருவரும் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் பங்கு முதலீடு என்பது.

சரி ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கிவிட்டோம் (எப்படி பங்கு வாங்கலாம் என்பது பற்றி அப்புறம் எழுதுகிறேன்). நமக்கு பணம் தேவை படும் போது அந்த பங்குகளை விற்க நினைக்கிறோம் என்றால் யாரிடம் விற்பது? இதற்காத உருவாக்க பட்டதுதான் பங்கு சந்தை. இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறுவனத்தில் பங்கு வாங்கியிருந்தாலும், அந்த நிறுவனம் நம்மிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்காது. ஒரு நிறுவனம் தான் வெளியிட்ட பங்குகளை திரும்ப வாங்குகிறது என்றால், அது தன்னுடைய மூலதனத்தை திருப்பி கொடுக்கிறது என்று அர்த்தம். அப்படி திருப்பி கொடுத்தால் அந்த நிறுவனம் எப்படி தொழில் செய்ய முடியும்? ஆக ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டு பணம் பெற்றுகொண்டது என்றால், அந்த பணத்தை அந்த நிறுவனம் திருப்பி தராது. நிறுவனத்தை மூடும் சூழ்நிலை வந்தால் மட்டுமே, மூடியதும் கடன்களை எல்லாம் அடைத்து விட்டு மீதி ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர் வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்.

இப்படி பொதுமக்களிடம் இருந்து முதலீடாக வாங்கிய பணத்தை வைத்து கம்பெனியை நிர்வாகம் செய்வது யார்? proprietorhsip என்றால் முதலாளியாக இருக்கும் நபர் நிர்வாகத்தை கவனித்து கொள்வார். Partnership என்றால் PartnersBoard of Directors என்று சொல்கிறோம். கம்பனியை ஆரம்பிக்க முயற்சி எடுத்தவர் கம்பனியில் அதிக ஷேர் வைத்திருப்பார். அவர் தலைமை பொறுப்பில் இருப்பார் (சத்யம் ராஜு மாதிரி) .

ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போது அல்லது அதன் விருவாக்கதிற்கு பணம் தேவை படும் போது ஷேர் வெளியிடும். அப்படி வெளியிடப்படும் ஷேர்களை நாம் நேரடியாக கம்பனியிடமே வாங்கிகொள்ளலாம். ஒரு நிறுவனம் முதன்முறையாக ஷேர் வெளியிடும் போது அதை IPO (Initial Public Offer)

கம்பனி ஷேர் வெளியிடும் போது நம்மால் வாங்க முடியவில்லை என்றால், அதே கம்பனி பங்குகளை நாம் எப்படி வாங்குவது? இங்குதான் பங்கு சந்தை என்னும் இடம் தேவைப்படுகிறது. ஆக நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்கவோ அல்லது ஒரு கம்பனி நல்ல நிலையில் செயல்படுகிறது என்று முடிவு செய்து அந்த கம்பனியில் பங்குகளை நாம் வாங்க வேண்டும் என்றாலோ நாம் நாட வேண்டிய இடம் பங்கு சந்தை. பங்கு சந்தையில் பங்குகள் பரிவர்த்தனை செய்வதில் உள்ள பணம் கம்பனிக்கு போய் சேராது. அது பங்கு வாங்குபவர் விற்பவரோடு முடிந்து விடும். இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். கம்பனிக்கு எந்தவித லாபமும் இல்லாமல் ஏன் பங்குகளை பங்கு சந்தையில் அனுமதிக்கிறது? ஏனென்றால் அந்த கம்பனியில் முதலீடு செய்தால் எப்போ வேண்டுமானாலும் நம் பணத்தை நாம் பங்கு சந்தை மூலமாக பங்குகளை விற்று எடுத்துக்கொள்ள முடியும் என்று முதலீட்டளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதுவுமில்லாமல், பங்கு சந்தையில் பங்குகளின் விலை அதிகமானால் கம்பனியை ஆரம்பிதவருடைய பங்குகளின் மதிப்பும் கூடும். இதுதான் பங்கு பரிவர்த்தனை அல்லது பங்கு சந்தையின் அடிப்படை.

பங்குகளை வாங்குவது விற்பது எப்படி, பங்குகளை தெரிவு (select) செய்வது எப்படி, என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் கீழ்கண்ட சுட்டியை தட்டி தெரிந்துகொள்ளுங்கள்.
நிர்வாகத்தை கவனித்து கொள்வார்கள். கம்பனியில் முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது. எனவே கம்பனி நிர்வாகம் குறிப்பிட்ட சில நபர்களிடம் ஒப்படைக்கப்படும். கம்பனியை நிர்வகிக்கும் நபர்களை என்கிறோம்.

பங்கு சந்தை ஓர் அறிமுகம்




பங்கு சந்தை மற்றும் பங்கு வர்த்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆவலா! மேலும் உங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விருப்பமா? இப்பகுதியில் பங்கு சந்தை மற்றும் பங்கு வர்த்தகம் பற்றிய அடிப்படை விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சிகொள்கிறோம்! இ-வணிக உலாவிகள் பங்கு சந்தை பற்றிய தங்கள் அறிவை பெருக்கிகொள்வதே இப்பகுதியின் நோக்கமாகும்!


பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - முன்னுரை

கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக நம் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் கூட பங்கு சந்தை பற்றி பேசுவது ஒரு வழக்கமாக ஆகி விட்டது. பங்கு சந்தையில் முதலீடு செய்யாவிட்டால் அது ஒரு பெரிய இழுக்கு என்று கூட சிலர் நினைக்கும் அளவு பங்கு சந்தை பற்றிய ஒரு வித மோகம் நிறைய பேருக்கு இருந்தது என்னவோ உண்மை.

பங்கு சந்தையில் நல்ல லாபம் வரும் போது அனைவரும் சந்தோஷமாக ஏற்றுகொண்டார்கள். அப்போது கூட சிலர் இது சூதாட்டம் என்று சொல்லி கொண்டுதான் இருந்தார்கள். பணம் சம்பாதிப்பவர்களோ இது என் திறமை என்று சொல்லி கொண்டார்கள், இது ஒரு சூதாட்டம் என்று சொல்லிகொண்டிருந்தவர்களில் அநேகம் பேர் பணத்தை இழந்தவர்களாக இருந்தார்கள்.

உண்மையிலேயே பங்கு சந்தை சூதாட்டமா அல்லது நியாயாயமாக பணம் சமாதிக்கும் ஒரு வழியா? இது பற்றி ஒரு தெளிவு வேண்டும் என்றல் நாம் நிறைய விஷயங்களை அலச வேண்டியிருக்கும். பங்கு சந்தையின் அடிப்படையில் இருந்து ஆரம்பித்து அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் அலச வேண்டியிருக்கும்.

அப்படி பட்ட ஒரு அலசலை நாம் இந்த தொடரில் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் லாபம் ஈட்டினாலும் சரி நஷ்டம் அடைந்தாலும் சரி, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது நமக்கு மிக மிக அவசியமானது. எனவே இந்த தொடரில் அது பற்றி அலசலாம்.

பங்கு சந்தை பற்றி பேச போகிறோம் என்றதும் இது ஒரு டெக்னிக்கல் சம்பந்த பட்ட ஒரு விஷயம் என்று நினைத்துவிட வேண்டாம். அடிப்படையில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மேற்கொண்டு தெரிந்து கொள்வோம்.

ஆக நமக்கெல்லாம் தெரிந்த ஒரு வார்த்தை பங்கு சந்தை. பங்கு சந்தை என்றால் பங்குகளை விற்கும் இடம் என்று நம் அனைவருக்கும் தெரியும். "பங்கு" என்றால் என்ன? இது பற்றி தெரிந்துகொள்ள கீழ்கண்ட சுட்டியை தட்டவும்

சென்செக்ஸ் என்றால் என்ன?




.

சென்செக்ஸ், சென்செக்ஸ் என நிறையக் கேட்டிருக்கிறோம் அது என்ன எனபதை இங்கு பார்ப்போம்

அதுக்கு முன்னாடி இந்தியாவின் பங்கு சந்தை வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.

இந்தியாவின் பங்கு சந்தை வரலாறு 1875-லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது 318 பேர் தலைக்கு ரூ. 1/- கொடுத்து இப்போது பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் என அழைக்கப்படுகிற BSE-யில் உறுப்பினரார்கள்! (இப்போ இவங்க வம்சா வழியெல்லாம் எங்கே இருக்குன்னு தெரியல :) )

1875-லேயே தொடங்கினாலும் ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரியில்ல. 1986 வரைக்கும் பங்கு சந்தையை மதிப்பிடுவதற்கு எந்த குறியீடும் இல்லை. 1986 -லே தான் BSE சென்செக்ஸ் என்ற பங்கு சந்தைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது.
மார்கெட்டில் இருக்கிற 30 பெரிய கம்பெனிகளின் பங்கு விலைகளைப் பொருத்து சென்செக்ஸ் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன! பல கம்பெனிகள் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டாலும் எல்லாமே குறியீட்டெண்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.



30 பெரிய கம்பெனிகளின் பங்குகளைப் பொருத்தே இது அமைவதால் இது BSE 30 குறியீடு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கம்பெனிகளின் பங்கு விலைகளில் மாற்றம் வரும் போது சென்செக்ஸிலும் ஏற்ற இறக்கங்கள் வரும். BSE 30-இல் 30 பங்குகள் 13 விதமான துறைகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை கட்டுமானம், வங்கி, ஆட்டோ மொபைல், டெக்னாலஜி போன்றவைகளாகும். இதைத் தவிர BSE 50, BSE 100 போன்ற குறியீடுகளும் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டன. BSE 50, 100 என்ற எண்கள், எத்தனைக் கம்பெனிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன எனபதைக் குறிக்கிறது.
இதே போல் துறைவாரியான குறியீடுகளும் உள்ளன. உலோகம், வங்கி குறியீடு என.

BSE என்பது Bombay Stock Exchange-யைக் குறிப்பது போல நிஃப்டி என்பது தேசிய பங்கு சந்தையைக் குறிக்கிறது. இதன் தலைமையகம் டெல்லியாகும். இதில் 50 கம்பெனிகள் 24 விதமான துறைகளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.நிஃப்டியும் நிஃப்டி 500, ஜுனியர் என பல குறியீட்டெண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

BSE-க்கு சென்செக்ஸ் எனவும் NSE-க்கு நிஃப்டி என்பதும் பங்கு குறியீட்டெண்ணாகும். இதைத் தவிர கல்கத்தா மற்றும் மெட்ராஸ் பங்கு சந்தைகளும் உள்ளன.

சரி, இது வரை குறியீட்டெண்களைப் பற்றி தெரிந்து கொண்டுவிட்டோம்... எப்படி இந்த 30 நிறுவணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எதை வைத்து குறியீடு கணக்கிடப்படுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்

Tuesday, February 1, 2011

VAT என்றால் என்ன ?

இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம். முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. அதாவது வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்வருகின்றார்கள் அல்லவா?  அவர்கள் அனைவரும் இந்த "வாட்" சட்டத்தின் கீழ் வருவார்கள்.  ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார்.  இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி!  இதை மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா? அல்லது மாநில அரசிடம் செலுத்துகின்றார்களா ?
இது மாநில அரசின் வருமானம்தான். நமது சட்டம் எந்த வருவாய் மத்திய அரசுக்குப் போக வேண்டுமென்றும், எந்த வருவாய் மாநில அரசுக்குப் போக வேண்டுமென்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது.  அரசியல் சட்டப்படி விற்பனை வரியென்பது மாநில அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி ஆதாரம்தான். இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. விற்பனை வரியில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1. தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம். 2. மத்திய விற்பனை வரிச் சட்டம்.  இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம் : இது 1937-38-ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கிறது.ஒருவர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் அரசாங்கத்தில் விற்பனை வரிச் சட்டத்தின்  அவர் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்  Registered Dealer  என்றழைக்கப் படுவார்.  பதிவு செய்து கொண்டதற்கு அவருக்கு ஒரு எண் கொடுக்கப் படும். அதை வைத்துக் கொண்டுதான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும்..சிறு வியாபாரிகளுக்கு இவ்வாறு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. பதிவு செய்து கொண்டவர் தமிழ்நாட்டில் வியாபாரம் தொடங்கலாம்.  அவர் செய்யும் விற்பனைகள் தமிழ் நாட்டிற்குள்ளேயே இருக்குமானால் அது உள்ளூர் விற்பனை என்றழைக்கப் படும். அதாவது  Sale within Tamilnadu  என்றழைப்பார்கள்.  விற்பனை செய்யும் பொருளுக்கு எவ்வளவு விற்பனை வரி விதிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப் பட்டு இருக்கும். அதன்படி வரியை  பொருள் வாங்குவோரிடமிருந்து வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.  ஒருபொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டு மென்று மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடமுடியாது.  இது மாநில அரசின் நிதி அல்லவா!  ஆகவே இதில் மத்திய அரசு தலையிட முடியாது.  இந்த விற்பனை வரியானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.  உதாரணமாக நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தமிழ் நாட்டில் 10 சதவீதம் விற்பனைவரியானால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதற்குக் கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம்.  இதைப்போல்தான் மற்றமாநிலங்களும் தன் வசதிக்கேற்ப விற்பனை வரியை விதிக்க முடியும். ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான விற்பனை வரி இந்தியா முழுவதும் கிடையாது.
தமிழ்நாட்டில் ஒருவர் தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார்.  அதற்கு 10% விற்பனை வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு (Whole sale dealer) விற்பனை செய்கிறார். அவர் வாங்கி சில்லரை விற்பனையாளருக்கு ( Retail seller)  விற்பனை செய்கிறார்.  இந்த விற்பனைக்கு 10% விற்பனை வரி விதிக்க வேண்டுமா வென்றால் இல்லையெண்ற்றுதான் கூற வேண்டும். இது  Second Sale  என்றழைக்கப் படுகிறது. அவர் இதற்கு 1%  வசூலித்தால் போதுமானது. இதற்கு  re-sale tax  என்று பெயர்.  சில்லரை விற்பனையாளர் பொருள் வாங்கும் பொது மக்களுக்கு ( Consumer)  விற்பனை செய்கிறார். அப்போதும் 1% வரி வசூலித்தால் போதுமானது. இவ்வாறு  ஒவ்வொரு விற்பனையின் போதும் வரி வசூல் செய்வதை  “Multi-point Tax”  என்றழைப்பார்கள்.  இவ்வாறு உள்ள தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது.  சில பொருள்களுக்கு 1% வரி இருக்கும்; இவ்வாறு பல விதமான வரி விகிதங்கள் இருக்கும்.  அதன்படி வரிவிதித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். 
இதைத் தவிர  Surcharge, Turnover-tax  என்ற வரி விதிப்பும் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் உண்டு.  இதைத் ஆண்டுதோறும் இந்த விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை அரசாங்கத்திடம் தணிக்கை செய்து தணிக்கை உத்தரவு பெறவேண்டும்.
இந்த நிலைதான் 31-12-2006 முடிய இருந்து வந்தது.  இந்த ஆண்டுமுதல் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு பதில் மதிப்புக் கூட்டு வரி என்ற  V.A.T.  நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதை விளக்குமுன்னர் மத்திய விற்பனை வரிச் சட்டத்தையும் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம். இந்த விற்பனை வரிச் சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது. மாறவில்லை.

மத்திய விற்பனைச் சட்டம்.( Central Sales-tax Act):-  ஒருமாநிலத்திலிருந்து மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்கள் வாங்கவும், விற்கவும்போதுதான் இந்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது. ஒருவியாபாரி மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்களை விற்கும்போது யாருக்கு விற்கிறார் எனப் பார்க்க வேண்டும். உதாரணமாக வியாபாரி ஒருவர் சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள வியாபாரிக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்வோம். பெங்களூரில் உள்ள வியாபாரி அம்மாநிலத்தில் பதிவு செய்த வியாபாரியாக ( Registered Dealer)   ஆக இருந்தால்  விற்கும் பொருளுக்கு 4% விற்பனை வரி வசூலித்து அரசாங்கத்திற்குக் கட்டினால் போதுமானது.  அவ்வாறு அவர் பதிவு செய்யாத வியாபாரியாக இருப்பின் உள்ளூரிலே அந்தப் பொருளுக்கு என்ன வரி விகிதமோ அதை வசூலிக்க வேண்டும்.  உதாரணமாக ஒரு பொருளுக்கு 12% உள்ளூர் வரி எனக் கொள்வோம். அதை பெங்களூரிலுள்ள பதிவு பெற்ற வியாபாரிக்கு 4%த்திலும், பதிவு பெறாத வியாபாரிக்கு 12%-த்திலும் விற்பனை செய்ய வேண்டும். 
அதைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள பதிவு பெற்ற வியாபாரி பெங்களூரில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் 4% வரி செலுத்தினால் போதுமானது. உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள் களை மற்ற மாநிலங்களிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்வோம்.  அவர் எந்த மூலப் பொருளாக இருந்தாலும் 4% வரி விகிதத்தில் அவர் பொருள்களை வாங்கி உற்பத்தியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் எந்த மாநிலத்திலிருந்து பொருள்கள் விற்கப் படுகின்றதோ அந்த மாநிலத்திற்குத்தான் விற்பனை வரி போய்ச் சேருகிறது.  இந்த மத்திய விற்பனைவரிச் சட்டம் இன்னும் அமுலில்தான் இருக்கிறது. மாறவில்லை.
சரி! இப்போது மதிப்புக் கூட்டு வரியைப் பற்றிப் பார்ப்போம்.  இது தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கிறது என ஏற்கனவே கூறி இருக்கிறோம்.  இதன் ஷரத்துக்கள் என்ன வென்று பார்ப்போம். இந்த மதிப்புக் கூட்டு வரி ஏற்கனவே சுமார் 130 நாடுகளில் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தையும், பாண்டிச்சேரியையும் தவிர மற்ற மாநிலங்கள் ஏற்கனவே அமுல் செய்து விட்டன. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இன்னும் அமுல் செய்ய வில்லை.
இதில் வரி விகிதங்கள் நான்கு மட்டுமே.
1. சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது.  அவைகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது.
2. மற்ற பொருள்களுக்கு 1%, 4%, 12.5% வரிவிகிதம்தான்.

இந்த மதிப்புக் கூட்டு வரியில் தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திலிருந்தது போல்  Surcharge, Additional Tax  ஆகியவைகள் எல்லம் கிடையாது. சரி! வரி விதிப்பு எவ்வாறு இருக்கிறது எனப் பார்ப்போம்.
உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் ஒரு பொருளை, மொத்த விற்பனையாளருக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்ளுங்கள். அந்தப் பொருளின் விலை ரூபாய் 10,000/- எனவும், அதன் விற்பனை வரி 4% எனவும் கொள்ளுங்கள்.  உற்பத்தியாளர் பொருளின் விலை ரூ. 10,000+ விற்பனை வரி ரூ.400/- ஆக மொத்தம் ரூ. 10,400/-க்கு விற்று விடுகிறார். ரூ.400/-ஐ அரசாங்கத்திடம் விற்பனை வரியாகக் கட்டி விடுகிறார்.
மொத்த விற்பனையாளைர் அதைப் ரூ. 12,000/- க்கு சில்லரை விற்பனையாளருக்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் ரூ.12,000/-க்கு 4% விற்பனை வரி எனக் கணக்கிட்டு மொத்தம் ரூ. 12480/- விற்கிறார்.  விற்பனை வரியான ரூ. 480/- ல் தான் கொடுத்த விற்பனை வரியான ரூ.400/- க் கழித்துக்கொண்டு மீதித் தொகையான ரூ.80/- அரசாங்கத்திற்குக் கொடுத்து விடுகிறார்.
சில்லரை விற்பனையாளர் பொருள் நுகர்வோருக்கு ரூ. 15,000/- க்கு விற்பனை செய்கிறார் எனக்கொள்ளுங்கள்.  அவர் ரூ. 15,000/- + விற்பனை வரி 4% ரூ. 600/- ஐ நுகர்வோரிடமிருந்து வாங்கி தான் வரி செலுத்திய  ரூ.480/- க் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ. 120/- அராசாங்கத்திற்குச் செலுத்தி விடுகிறார்.
One important aspect in V.A.T is, the material suffers tax at the same rate at every point of sale whereas under T.N.G.S.T, Act the material suffers @1% resale tax at every point of sale other than the first sale.
சரி ! உற்பத்தியாளருக்கு இது எவ்விதத்தில் பயனளிக்கிறது?  தற்போது உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மூலப் பொருள்களுக்கு 4% வரிகொடுத்து எல்லா மூலப் பொருள்களையும் பெற்றுக்கொள்கிறார்கள்.  தமிழ்நாட்டிலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுக்கு உற்பத்தியாளர்கள் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.  அயல் மாநிலத்திலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுகளையும் 4% வரி விகிதத்தில்  வாங்கிக் கொள்ளலாம்.  ஆனால் விற்கும் போது தமிழ் நாட்டிலிருந்து வாங்கிய மூலப்பொருள்களுக்குக் கட்டிய வரி மட்டுமே விற்பனை செய்யும் வரியிலிருந்து கழித்துக் கொண்டு மீதத்தை அரசாங்கத்திற்குக் கட்டமுடியும்.  உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள்களை ரூ. 1000/-க்கு வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்.  அதற்கு 4% வரி கட்டுகிறார். ரூ. 40/- வரித் தொகையா கின்றது. மொத்த அடக்க விலை 1000+40 = 1040.  அதை ரூ.1200/-க்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள்.  அதற்கு வரித்தொகையாக ரூ. 48/- வசூல் செய்கிறார்.  அரசிற்குக் கட்டும்போது ரூ. 48/-ல் இருந்து ரூ. 40/- ஐக் கழித்துக் கொண்டு ரூ. 8/- மட்டும் செலுத்தினால் போதும். அதாவது அவர் வாங்கிய பொருள்களின் மீது செலுத்திய வரித் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. இது தமிழ்நாட்டிலிருந்து வாங்கிய பொருள்களின் வரித் தொகையையே இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியும்.  அயல் மாநிலத்திலிருந்து வாங்கிய பொருள்களுக்குக் கட்டிய வரியினை இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியாது.
இந்த மதிப்புக் கூட்டு வரியின் கீழ், தமிழ் நாடு வணிக வரிச் சட்டத்தின் கீழ் இருப்பதைப்போல் ஆண்டுதோறும் அதிகாரிகளால்  Assessment Order  பெற வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களே தாங்களாகவே சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டால் போதும்.மொத்த வணிகர்களில் சுமார் 20% பேர்களைத் தேர்வு செய்து Assessment  செய்வோம் எனக் கூறுகிறது வணிக வரித்துறை.
இந்த மதிப்புக் கூட்டு வரியை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது நாம் பார்ப்போம். 

நாம் இப்போது இதில் உள்ள அனுகூலங்கள், பிரதிகூலங்களைப் பார்ப்போம். முதலில் அனுகூலங்களைப் பற்றி கூறப்படுவது என்ன?
உற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4% வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.  உதாரணமாக ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4% வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார்.  உற்பத்தி செய்த பொருளை  ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு விற்பனை செய்து விடுகிறார்.  அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டும்போது  அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித் தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி விடுவார்.  அவர் கொடுத்த ரூ. 40/- "Input Credit"  என்றழைக்கப் படுகிறது.  இந்த  V.A.T.  சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 1000/- ஆகவே இருந்து வருகிறது.  ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும் பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது விற்றிருப்பார்.  ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களின் வாதம்.
"Input Credit"  என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும் பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள்.  உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு  Electric Motor - ஐ  பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார்  எனக்கொள்ளுங்கள்.  இது வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர் கொடுக்கும் வரியை  Input Credit  ஆக எடுத்துக் கொள்ள முடியாது.  அதே  Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்; அந்த வரிப் பணத்தை  Input Credit  ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர் செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு செய்வதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க முயற்சிப்பார்கள்.  அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.
உள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம்.  அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப் படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது,  Assessmentக்குச் செல்வது போன்றவைகள் கடையாது.   V.A.T.  வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ. 3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது.  இப்போது அது கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.
இதில்  Resale Tax, Surcharge, Turn-over- tax  போன்றவைகள் கிடையாது.
இதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி! அடுத்த தரப்பின் வாதம் என்ன?
இந்த "Input Credit"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான, பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின்  Assessment  கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.  ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
மாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும். அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும்.  வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். 
உள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே பொருள்களின் விலை குறையும்  என்று எதிர்பார்க்க முடியாது.
மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும்  ஒவ்வொரு விதமான வரி விதிக்கப் படுகிறது. அறிவிக்கப் பட்டபோது "எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி விதிக்கப்படமாடடாது" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு 16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது.  ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட வில்லை.
அடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல் கூறப்பட்டுள் ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாதந்தோறும்
கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச் சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும். இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில் இடமுண்டு.  இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை. இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 30





TECHNICAL ANALYSIS இல் பார்க்க வேண்டிய விசயங்களில் அநேகம் உண்டு, இருந்தாலும் தடை இன்றி வர்த்தகம் செய்வதற்கும், புதிதாக ஒரு பங்கை தேர்ந்தேடுப்பதற்க்கும், அந்த பங்கின் இலக்கு என்ன என்பதை காண்பதற்க்கும், தொடர்ந்து சக்தியுடன் ஏறுமா, இல்லை இறக்கம் இருக்குமா, என்பதை கண்டு வர்த்தகம் செய்து நிறைவாக இருப்பதற்கும் நாம் இது வரை பார்த்து வந்த விஷயங்கள் போதுமானதாக இருக்கும்,

இருந்தாலும் உங்களுக்கு பயிற்சி ஏற்பட ஏற்பட மேலும் புதிய விசயங்களை நீங்கள் தேட ஆரம்பிப்பீர்கள், அப்பொழுது உங்களின் தேடல் அநேக பலன்களை தரும், நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கின்றோம், மேசையை விட்டு நகராமலே உலகில் இருக்கும் அனைத்து விசயங்களையும் வலை தளங்களின் மூலம் எடுத்து விடலாம்,

சரி நாம் பயின்ற மேற்கண்ட அனைத்து பாகங்களில் இருந்தும் முக்கியமான விசயங்களை எப்படி எல்லாம்  பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்பதினையும், அனைத்து விசயங்களையும் தொகுப்பாக ஒரு பங்கினை தேர்ந்தெடுக்க எப்படி பயன்படுத்த வேண்டும்  என்பதினையும் பார்ப்போம், அப்பொழுது தான் இந்த செயல் முழுமை பெரும்,

பொதுவாக ஒரு பங்கினை பற்றி முழுமையாக  நாம் அறிந்து கொள்ள கண்டிப்பாக ஏதாவது ஒரு கண்ணுக்கு தெரிந்த வடிவம் வேண்டும், அந்த வடிவம் வரைபடங்களே, ஆகவே CHART எனப்படும் வரைபடங்கள் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது, அதிகமான நபர்கள் வலை தளங்களில்  EOD DATA கொடுக்கின்றார்கள், இதற்காக செலவு செய்வது ஞாயமான செயல் தான், நாம் தங்குவதற்கு வீடு கட்டுவதை யாரும் செலவு என்று எண்ணுவோமா, ஆகவே இந்த CHART DATA வாங்குவது அதி முக்கியம், இலவசமாக கூட கிடைக்கலாம் அதை வலை தளங்களில் தேடுங்கள்,   அடுத்து

பொதுவாக நாம் ஒரு பங்கினை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம்

அதாவது நாம் வர்த்தக பயணம் மேற்கொள்ள வர்த்தகம் செய்யும் போது ஒன்று பங்குகளை  வாங்கி  லாபத்தில் விற்ப்போம், அல்லது விற்று பிறகு லாபத்தில் வாங்குவோம், இது முழுமையாக தின வர்தகத்திற்க்காகவும், FUTURE CONTRACT எனப்படும் F&O என்ற வர்தகத்திர்க்காகவும் பயன்படுத்துவோம்,

அதே நேரம்  DELIVERY எனப்படும் முறையில் பங்குகளை வாங்கி  சிறிது  நாட்கள் கழித்து நாம் எதிர்பார்த்த இலக்குகள் வந்தவுடன் நமது கை இருப்புகளை லாபத்தில் விற்ப்போம், இதற்க்கு POSITIONAL TRADE, SWING TRADE, SHORT TERM TRADE, LONG TERM TRADE என்று நாம் பங்குகளை வைத்து இருக்கும் நாட்களின் அடிப்படையில் பெயர் வைத்துக்கொள்ளலாம், ஆனால் இங்கு அனைவரின் நோக்கமும் லாபம் மட்டுமே,

இது போன்ற அனைத்து விதமான வர்த்தகங்களுக்கும் லாப சூட்சுமங்கள் நாம் பங்குகளை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது, பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகளின் நகர்வுகளை பொறுத்து மேலே சொன்ன என்ன விதமான வர்த்தகங்களில் நாம் ஈடுபடப்போகிறோம் என்பது வெளிச்சத்திற்கு வரும், நாம் தினவர்த்தகம் செய்தாலும், அல்லது நீண்ட நாட்களுக்கு உரிய வர்த்தகம் செய்தாலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று அநேகம் உள்ளன அவைகளை பற்றி தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்,

பங்குசந்தைகளில் வர்த்தகம் செய்வது என்பது ஒரு பேரூர்ந்தில் பயணம் செய்வதற்கு சமம், பொதுவாக நாம் திருச்சியில் இருந்து ஒரு 30 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் வழியில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்க்கு உரிய TOWN BUS இல் செல்வோம் இல்லையா, இது தான் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் பேரூர்ந்தை தேர்ந்து எடுப்பது தான் நமது பயணத்தின் ஆடி அந்தமே உள்ளது,

எப்படி நமக்கான  பேரூர்ந்தை தேர்ந்தெடுப்பது அவசியமோ, அதே போல் நாம் வர்த்தகம் செய்வதற்கு சரியான  பங்கை தேர்ந்தெடுப்பதும் அவசியம், எண்ணி பாருங்கள் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாத  பேரூர்ந்தில் ஏறினால்  என்ன ஆகும், நமது பயணம் கேள்விக்குறியாகும்! என்ன காரியத்திற்காக நாம் இந்த பயனத்தை ஆரம்பித்தோமோ அந்த விஷயம் தடைபடும், முழுவதும் வீணாகி நமக்கு Tension வருவது தான் மிஞ்சும்,

இதே போல் தான் தவறான பங்குகளை நாம் தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்தால் என்ன ஆகும், ஆகவே இந்த முக்கியமான சூட்சுமங்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டால் தான் நமக்கு வெற்றி என்பது சாத்தியமாகும், சரி இன்னும் விரிவாக பார்ப்போம்

முதலில் பங்குகளின் நகர்வுகள் எப்பொழுதும் ஒரு வடிவத்தின் வழியாக கிடைக்கும் Break out  எனப்படும் செயல் நடப்பதினால் தான் நடந்தேறும், இதன் மூலமே அந்த பங்கு சென்றடைய வேண்டிய இலக்குகள் என்ன என்பதினை நாம் அறியலாம். ஆகவே நாம் நமது வர்த்தகத்திற்கு தேவையான பங்குகளை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வடிவங்களை தான்  பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நன்றாக  நகரக்கூடிய பங்குகள் எது என்பதை  நாம் அடையாள காணலாம்,

இவ்வாறு வடிவங்களை அடையாளம் காண  நாம்  நமது Charting s/w ஐ பயன்படுத்தி வருசயாக பங்குகளை பார்த்துக்கொண்டே வர வேண்டும், எந்த பங்கில் என்ன விதமான வடிவங்கள் உள்ளது என்பதினை அடையாளம் கண்டு, அந்த பங்கு எப்பொழுது Break out என்ற நிலையை அடையும், அதற்க்கு உண்டான Break out point என்ன என்பதினை கண்டு பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்,

பிறகு இவ்வாறு break out என்ற  நிலையினை  அடைந்த  பின்பு  தொடர்ந்து  ஏறுவதற்கு  உரிய  சக்திகள்  இந்த  பங்கில்  உள்ளதா, என்பதினை நாம் முன்னர் பார்த்த Indicator களை பயன்படுத்தி தெளிவு பெறவேண்டும், அதில் சாதகமான விஷயம் கிடைத்த பிறகு, அந்த பங்கிற்கு ஏதும் சாதகமான அல்லது பாதகமான செய்திகள் உள்ளதா என்பதினை வலை தளங்களில் தெரிந்து கொள்வதும் நல்லது,

மேலும்   தொடர்ந்து அந்த பங்கில் volume எவ்வாறு நடந்து வருகிறது என்பதினை உற்று நோக்க வேண்டும், volume  மிக அதிகமாக நடந்து கொண்டே இருந்தால் அதன் பலம் அதிகம்,  இந்த volume ஐ  நாம் கண்காணிப்பதன் மூலம் அநேக நன்மைகளை அறியலாம், இது அணைத்து indicator களையும் விட தலை சிறந்தது, அடுத்து இந்த volume நல்ல நிலையில் இருந்து, indicator கள்  எல்லாம் சாதகமாக இருந்து, break out என்ற நிலையினையும் எட்டி விட்டால்,

சந்தேகமே வேண்டாம் அன்றே ஒரு மிகப்பெரிய உயர்வை இந்த பங்கு கொடுக்கும், மேலும் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வடிவத்தின் இலக்குகளை அடைய பயணிக்க ஆரம்பிக்கும், இவ்வாறுதான் நாம்  பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் மேலும், அவ்வாறு தேர்ந்தெடுத்த பங்கின் வகையில் உள்ள மற்றைய (same sector scripts) பங்குகளின் நிலை என்ன என்பதினையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்,

அடுத்து நமது வர்த்தகம் எந்த வகையை சேர்ந்தது என்பதினையும் முதலில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும், அதாவது நீங்கள் தின வர்த்தகராக இருந்தால் இது போன்ற break out  பெற்ற  பங்குகளை வர்த்தகம்  செய்து                  குறிகிய லாபத்துடன் வெளியேறுதல் வேண்டும், அதாவது உங்களுக்கு ஒரு நாளைக்கு எவளவு லாபம் ஈட்ட வேண்டும் என்று எண்ணம் இருக்கின்றதோ அதற்க்கு தகுந்தார்ப்போல் வர்த்தகம் செய்ய வேண்டும்,

இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் திருச்சிக்கு அடுத்து ஒரு 30 கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு செல்ல அதற்க்கு உரிய Town Bus ல்  செல்லலாம், அதே நேரம் சென்னை செல்லும் விரைவு பேரூர்ந்திலும் செல்லலாம், சென்னை Bus இல் சென்றால் விரைவாக செல்ல முடியும், எந்த தங்கு தடையும் இருக்காது,

அதே நேரம் Town Bus இல் சென்றால் நீங்களே யோசித்து பாருங்கள், town bus இல் செல்வது என்பது வெறும்  Intra day chart ஐ மட்டும் பயன்படுத்தி வர்த்தகம் செய்வது போல, அதே நேரம் EOD chart ஐ பயன்படுத்துவது சென்னை bus இல் செல்வது போல, எதில் அதிக வசதி இருக்கும்,

ஆனால் இந்த சென்னை  Bus இல் சென்றால் Ticket இன் விலை அதிகமாக தான் இருக்கும், அது போல EOD CHART இல் பங்குகளை கண்டறிவது கொஞ்சம் உழைத்தால் தான் கிடைக்கும், நீங்கள் home work செய்ய தயாரானால் பின்பு சென்னை Bus இல் வர்த்தகம் செய்யலாம், நீங்களே முடிவு செய்யுங்கள், நெரிசலில் சிக்கி நின்று! நின்று செல்லும் town bus வர்த்தகம் வேண்டுமா, அல்லது  அனைவருக்கும் இடம் கிடைத்து மிக விரைவாக செல்லும் சென்னை bus வர்த்தகம் வேண்டுமா,    அடுத்து

நீங்கள் வாங்கி வைத்து லாபம் பார்க்கும் வர்த்தகம் செய்தால் (DELIVERY) அந்த பங்கின் இலக்குகள் அடையும் வரை பொறுத்து இருந்து இலக்குகள் வந்த வுடனோ அல்லது அதன் அருகில் வந்தவுடனோ உங்கள் லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் அடுத்து எந்த பங்கில் வர்த்தகம் செய்யலாம் என்பதினையும் முடிவு செய்து இந்த பங்கில் இருந்து வெளியேறுங்கள்,

அதோடு தற்பொழுதைய சந்தைகளின் நிலை என்ன ஏதும் தடைகளில் உள்ளதா, அல்லது தொடர்ந்து ஏறுமா என்பதினையும் கவனிக்க வேண்டியது முக்கியம், இவ்வாறெல்லாம் நீங்கள் யோசித்து ஒரு பங்கை தேர்ந்தெடுத்தால் நட்டங்கள் என்பது நமக்கு நேராது,
                               
அடுத்து தின வர்த்தகத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்று கொஞ்சம் பார்த்து விடுவோம்:
    
பொதுவாக எந்த ஒரு செயலுக்கும் முன்னேற்ப்பாடு  என்பது முக்கியம், அடுத்து இயற்கையாகவே நமக்கு இந்த முன்னேற்ப்பாடு செய்யும் பழக்கம் உள்ளது, காலையில் எழுவதில் இருந்து  இரவு உறங்கும் வரை நாம் செயயும்  ஒவ்வொரு செயலுக்கும் சில முன்னேற்ப்பாடுகளை செய்வோம், இன்னும் சொல்ல வேண்டுமானால் தூங்குவதற்கு முன் BED SPREAD விரிப்பது, போர்வைகளை சரி படுத்திக்கொள்வது,  A.C போட்டு கொள்வது, என்று நிம்மதியான உறக்கத்திற்கு முன்னேற்ப்பாடு செய்கிறோம் இல்லையா,

அது மாதிரி தான்!  ஆனால் இந்த பங்கு வர்த்தகத்திற்கு மட்டும் பெருவாரியான வர்த்தகர்கள் தயாராவதே இல்லை, அது ரொம்ப முக்கியம், ஒன்றுமே தெரியாத வர்த்தகர்கள் கூட சில அடிப்படை தகவல்களை சேர்த்து கொண்டு தான் தின வர்த்தகத்திற்கு  செல்ல வேண்டும் அது மாதிரியான விசயங்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்
 
முதலில் அன்றன்றைய தின நகர்வுகளை முடிவு செய்வது நமது NIFTY மற்றும்  SENSEX ஆகிய குறியீடுகளின் அன்றன்றைய SUPPORT மற்றும்   RESISTANCE புள்ளிகள் தான், இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளும் நம்மை வெகுவாக பாதிக்கும்,  இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நாம் பயணம் செய்யும் வழியில் ஏதாவது ஒரு அசம்பாவீதம் நடந்து இருந்தால் நமது பயணமும் அங்கு சற்று தடைபடும் இல்லையா! அதே போன்றுதான்,

ஆகவே செல்லும் வழி எவ்வாறு உள்ளது என்பதினை தெளிவாக தெரிந்து கொள்ள  நாம் உலக சந்தைகளின் நிலைகளை தெரிந்து கொள்வது அவசியம் அந்த வகையில் சில முக்கியமான விசயத்தி பற்றி பார்ப்போம்,

இந்த பங்கு சந்தைகளுக்கு எல்லாம் அண்ணனாக விளங்கும் அமெரிக்க சந்தைகள் அனைவருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக விளங்குகிறது, ஏனெனில் மிக பழமையான பங்கு சந்தை வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த அமெரிக்க சந்தைகள், அந்த வகையில் அமெரிக்க சந்திகளின் நிலை என்ன, அவைகளின் முதல் நாள் முடிவு எப்படி உள்ளது என்பதினை நாம் பார்க்க வேண்டும்,

அதன் படி அவர்கள் உயரத்தில் முடிந்து இருந்தாலும் அல்லது வீழ்ச்சி அடைந்து இருந்தாலும், அவர்களின் வரைபடங்களை வைத்து இந்த வீழ்ச்சி அல்லது உயர்வு தொடர்ந்து என்ன மாதிரியான செயல்பாட்டை அவர்களுக்கு  ஏற்படுத்தும் என்பதினை கவனிக்க வேண்டும், ஏனெனில் முதல் நாள்  உயர்வில் முடிந்து இருந்தாலும் TECHNICAL CHART இன் படி அது சரியான தடை புள்ளியாக இருந்தால் தொடர்ந்து சரிவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்,

அதே போல் வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் அது சரியான SUPPORT புள்ளியாக இருக்கலாம், ஆகவே அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதினை அவர்களின் TECHNICAL CHART இன் துணை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும், பிறகு அமெரிக்க சந்தைகளின் 24 மணி நேர வர்த்தகமான FUTURE சந்தைகள் நமது கணிப்பின் படி செயல்படுகிறதா என்பதினையும் கவனிக்க வேண்டும்,

பிறகு இதன் வெளிப்பாடு ஆசிய சந்தைகளில் எப்படி எதிரொலிக்கிறது  என்பதினையும் பார்த்து கொள்ளவேண்டும், இங்கு எப்படி செயல்பாடு இருக்கின்றதோ! அதே நிலை நமது சந்தைகளுக்கும் ஏற்படலாம், அடுத்து நாமது XEROX COPY யான SINGAPORE NIFTY யின் நிலை என்ன என்பதினை பார்த்து, நமது சந்தை இன்று இப்படி தான் செயல்படும் என்ற ஒரு முடிவுக்கு வரலாம்,

இது ஒரு 60% அனுமானமே, அடுத்து நமது சந்தை தொடங்கியவுடன் நமது அனுமானம் சரியாக உள்ளதா என்பதினை பார்த்து, சரியாக இருந்தால் தொடர்ந்து நமது வர்த்தக நிலைகளை எடுக்கலாம், அதே நேரம் அதற்க்கு எதிர்பதமாக இருந்தால், சற்று பொறுமையுடன் இருந்து சரியான பாதை என்ன என்பதினை தெளிவு படுத்திய பிறகு வர்த்தகம் செய்யலாம், இறுதி வரை சந்தையின் கோணம் தெளிவாக நமக்கு புடி படவில்லை என்றால் வர்த்தகம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது,

அடுத்து நீங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் பங்குகளை சற்று கவனித்து, நீங்கள் வர்த்தகத்திற்காக எடுத்து இருக்கும் BUY ABOVE மற்றும்  SELL BELOW  புள்ளிகளை அந்த பங்கு எவ்வாறு கையாளுகிறது என்பதினை ஆய்ந்து வர்த்தகத்தை தொடங்கலாம்,

அதோடு மிக முக்கியமாக  சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக RELIANCE INDUSTRIES என்ற பங்கு இருப்பதால், உங்களின் ஒவ்வொரு வர்த்தகத்தின்  பொழுதும் RIL பங்குகளின் நிலை என்ன, அதாவது தொடர்ந்து உயரும் வாய்ப்புகளில் உள்ளதா அல்லது தொடர்ந்து இறங்கும் நிலையில் உள்ளதா என்பதினை தெரிந்து கொண்ட பின்பு தான் வர்த்தகம் செய்ய வேண்டும்,

ஏனெனில் RIL பங்குகள் தன்னிச்சையாக நின்று சந்தையின் போக்குகளையே மாற்றி விடும் சக்தியை பெற்றது என்பது நாம் அறிந்ததே, அதே போல் இதனுடன் NIFTY யின் நிலையையும் கணித்து கொண்டே இருக்க வேண்டும், இந்த இரண்டு விசயங்களும் உங்களின் வர்த்தக பாதைகளிலே இருந்தால் உங்களுக்கு வெற்றி தான், இதே போல் தான் நீங்கள் தின் வர்த்தகத்திற்கு தயாராக வேண்டும், இப்படியே தொடர்ந்து செய்து வாருங்கள் தொடக்கத்தில் சற்று சிரமங்கள் இருக்கலாம், போக போக சந்தையின் போக்குகள் எளிதாக் உங்கள் கைகளில் வந்து விடும், வாழ்த்துகள்

கடந்த 30 வாரங்களாக நாம் பார்த்து  வந்த பயில்வோம் பங்கு சந்தை இனிதே முடிவடைகிறது, இந்த செயல்பாட்டிற்க்காக எனக்கு உருதுணையாக இருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன், 4TMEDIA வலைதல உரிமையாளர்களுக்கு என் மன மார்ந்த நன்றி, வாழ்க தமிழ்! வளர்க்க பங்கு சந்தை !