Monday, January 10, 2011

போட்டோஷாப்-நொடியில் பாஸ்போர்ட்சைஸ் போட்டோ ரெடி செய்ய



வேலைக்காக விண்ணப்பித்தாலும் சரி,ரேஷன் கார்ட்,பாஸ்போர்ட் என எதற்கு நீங்கள் அப்ளிகேஷன் போட்டாலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவசியம் தேவைப்படும். இந்த ஆக்ஷன் டூல் மூலம் நீங்கள் நொடியில் 8 பாஸ்போர்ட் புகைப்படங்களை ரெடிசெய்து பிரிண்ட் எடுத்துவைத்துக்கொள்ளலாம்.1 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஸன் டூலை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் போட்டோஷாப் எந்த வெர்ஷன் வைத்திருந்தாலும் இந்த ஆக்ஷன் டூலை போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும்.இப்போது தேவையான புகைப்படம் தேர்வு செய்யவும். நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள நடிகையின் முகம் மட்டும் நமக்கு வேண்டும். எனவே புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் ஆக்ஷன் டூலை தேர்வு செய்துகொள்ளுங்கள.
 இப்போது உங்களுக்கு படத்தில ஒரு மூலையில் கிராப் டூல் போன்று சிறு கட்டம் இருக்கும். மற்ற இடங்கள் ஸேடோ செய்ததுபோல மறைந்திருக்கும். இப்போது அந்த கட்டத்தை கர்சரால் நகர்த்தி படத்தில் வேண்டிய அளவிற்கு கொண்டுவாருங்கள. சரியான போஸிஷன் வந்ததும் கீ -போர்டில் என்டர் தட்டவும. இப்போது உங்களுக்கு 8 படங்கள் கிடைத்திருக்கும். அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே இந்த குழந்தையின் படத்தை தேர்வு செய்துள்ளேன.
படத்தில் வேண்டிய அளவினை தேர்வு செய்தேன்.
என்டர் தட்டியவுடன வந்துள்ள படம் கீழே-
இதைப்போலவே சின்ன சின்ன ஆக்ஷன் டூல்கள் 100 க்கும் மேல் என்னிடம் உள்ளது.ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.இந்த ஆக்ஷன் டூல்கள். போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்களுக்கும் போட்டோஷாப் கற்றுகொள்பவர்களுக்கும் அவசியமானது..அத்தியாவசமானது...எனவே தனியே இதனை சேமித்துவைத்துக்கொள்ளுங்கள.

போட்டோஷாப் - விதவிதமான மலர்களின் பிரஷ் டூல்கள்.-58


அழகான புகைப்படம் இருக்கும். அதில் மேலும் அழகாக்க ஒரு டிசைனை அதில் சேர்த்துவிட்டால் சூப்பராக மாறிவிடும். விதவிதமான மலர்கள் மற்றும் இலை டிசைனுக்காகவே போட்டோஷாப்பில் பிரஷ்கள் உள்ளது. இந்த பிரஷ் டூலை பதிவிறக்கம செய்து உங்கள் போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

சாதாரண புகைப்படம் கீழே-

இதில் அனைத்து வித டிசைன்கள் மொத்தமாக போட்டுள்ளேன்.படத்திற்கு எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இது பார்டர் டிசைன். தேவையான கலர் தேர்வு செய்து கொள்ளவும்.
இதர் டிசைன்கள் கீழே-






இதைப்போலவே விதவிதமாக 20 டிசைன்கள் இந்த பிரஷ்ஷில் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ அதனை படத்திற்கு ஏற்ப வேண்டிய அளவில் வேண்டிய கலரில் எடுத்து பொருத்திக்கொள்ளுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.

போட்டோஷாப் - 100 சவரன் தங்க நகைகள் உங்களுக்காக-57


இன்று 1 கிராம் தங்கம் விலை தோராயமாக ரூபாய் 1800 -க்கு விற்கினறது. ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கம் போட்டு அழகுபார்க்க முடியுமா? அதனால் நாம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 100 சவரன் தங்க நகை களை தரலாம் என்று உள்ளேன். 20 செட் தங்க நகைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள். நான் கீழே 
சசிகுமார்-அனன்யா அவர்களின் படத்தை தேர்வு செய்துள்ளேன்.
நெக்லஸ் மாடலில உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் படத்தில் அந்த நகையை இழுத்துவந்து விடுங்கள். பின்னர் Ctrl+T மூலம் நகையை தேவையான அளவு மாற்றி குறைத்துக்கொள்ளுங்கள்.கழுத்தில தேவையான இடத்தில் மூவ் டூல் மூலம் நகர்த்தி வைத்துவிடுங்கள்.நான் இவ்வாறு நகை டிசைன் செய்தபின் வந்துள்ள புகைப்படம் கீழே-
நமது வாசகர்களுக்கு ஏற்கனவே PSD பைலை எப்படி பயன்படுத்துவது என்று போட்டோஷாப் பாடத்தில் பதிவிட்டுள்ளேன். முந்தைய பாடததை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற-56




நம்மிடம் உள்ள புகைப்படங்களை போட்டோஷாப் துணையில்லாமல் முப்பரிமான எபெக்ட்களை 3D Image கொண்டுவரலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இங்கு சாதாரண புகைப்படத்தை எடுததுள்ளேன்.
இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும். அதன் வலதுபுறம் கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் முதலில் ஒரு பாக்ஸ் இருக்கும். நமது புகைப்படத்தை சுற்றி வண்ண நிறங்கள் வரவழைக்க. தேவையானல வண்ணங்கள் கொண்டுவரலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அதற்கு அடுத்துள்ள கட்டத்தை கவனியுங்கள்.
3D Transformation என்று போட்டுள்ள இதில் உள்ள Rotate-ல் உள்ள ஸ்லைடரை நீங்கள் நகர்த்த படமானது வேண்டிய அளவிற்கு திரும்பும். அதைப்போலவே அடுத்துள்ள Curving  ஸ்லைடரை நகர்த்த படமானது குவிந்த படியும் - குழிந்த படியும் நமக்கு கிடைக்கும் கீழே உள்ள படங்களை பாருங்கள்.

இதைப்போலவே கடைசியாக உள்ள Scale H நகர்த்துவது மூலம் படமானது அகலத்தில் அதிகமாக மாறும். அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் படத்தின் நான்கு மூலைகளில்கார்னர் டிசைன்களை கொண்டுவரலாம். இதிலி எந்த கார்னர் டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்தால் அந்த டிசைனானது படத்தில் வரும். அதைப்போலவே கார்னர் கீழே நான்கு மூலைகளுக்கான ரேடியோ பட்டன் இருக்கும்.  படத்தில் உள்ள நான்கு மூலைகளில் எந்த மூலையில் கார்னர் டிசைன் வேண்டுமோ அந்த மூலைக்கான ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் அந்த மூலையில் டிசைன் வரும். நான் நான்கு மூலைகளிலும் கார்னர்செலக்ட்செய்துள்ளேன்.அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒரு படத்தில் உள்ள பிரதிபலிப்பை இதில கொண்டுவரலாம். இதில் உள்ள ஸ்லைடர்களை நகர்த்துவது மூலம் அதன் பிரதிபலிப்பை சுலபமாக மாற்றலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதன் உள்ளாக நமது புகைப்படம் - பெயர்கள் கொண்டுவரலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
டிசைன்செய்த போட்டோக்களை வேண்டிய பார்மெட்டில் மாற்றி தனியே போல்டரில் போட்டு வைக்கலாம்.போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் போட்டோஆல்பத்தின் நடுவில இதுபோல டிசைன்களை சேர்த்தால் வித்தியாசமாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
மறக்காமல் ஒட்டுபோட்டு செல்லுங்கள். அதனால் மேலும் பலர் இந்த சாப்ட்வேர் பற்றி அறிய வாய்ப்பாக அமையும்.நன்றி

போட்டோஷாப் -புகைப்படங்கள் மொத்தமாக பிரிண்ட் செய்ய-55


திருமணம் முதல் இதர நிகழ்ச்சிகள் வரை நாம் புகைப்படங்கள் நிறைய எடுப்போம். அனைத்தையும் பிரிண்ட்போட்டால் அவ்வளவுதான். நமது கஜானா காலியாகிவிடும். பிரிண்ட் போட்டுவிடடு பார்க்கும்போதுதான் அடடா இதை நாம் பிரிண்ட்போடாமலே இருந்திருக்கலாமே என யோசிப்போம். இந்த சங்கடங்களை தவிர்க்க இந்த ஆக்சன் டூல் நமக்கு உதவுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வழக்கப்படி இதனை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பின்னர் நீங்கள் எடுத்த முதல் 25 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். ஆக்சன் டூலில் இந்த ஆக்சனை கிளிக் செய்யுங்கள்.சில நிமிட காத்திருப்புக்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
அதில் தேவையான புகைப்படததை மார்க்செய்துகொண்டு அதை மட்டும் பிரிண்ட் போடலாம்.போட்டோ ஸடுடியோ வைத்திருப்பவர்கள் இதுபோல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரிவியு எடுத்துகொடுத்து பின்னர் தேவைப்பட்டதை பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம்.அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் தங்களிடம் உள்ள புகைப்படத்தை இதுபோல சிறியதாக போட்டு வீட்டில் காண்பித்து தேவையானதை பெரியதாக போட்டுக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


இது ரம்ஸான் ramzon நோன்பு மாதம். இஸ்லாமிய சகோதர - சகோதரிகளுக்காக நான் ஏற்கனவே தொழுகைக்கான நேரம் செட் செய்யும் சாப்ட்வேரை பதிவிட்டிருந்தேன்.இதுவரை அந்த சாப்ட்வேரை சுமார் 1200 பேர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளார்கள். இப்போது புதியதாக பதிவிற்கு வந்துள்ள நண்பர்களுக்கு அந்த பதிவைப்பற்றி தெரியாது்.அந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.

போட்டோஷாப்-புகைப்படத்தின் ஓரங்களில் மடிக்க-54


போட்டோஷாப்பில் இன்று புகைப்படத்தின் ஓரங்களில் மடிந்ததுபோல டிசைன் கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம். போட்டோஷாப்பிலேயே இந்த டிசைன் செய்யலாம். ஆனால ஒரே படம் செய்வதானால் பரவாயில்லை. அதிக எண் ணிக்கையில் செய்கையில் வேலைகடினமாகிவிடும். சுலபமான வழி இருக்க எதற்கு கஷ்டப்படவேண்டும். நமக்கு கை கொடுக்க Action உதவுகின்றது. 12 KB அளவுள்ள Page Curl Action-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.(முந்தைய பதிவுகளில் Action எப்படி கொண்டுவருவது என நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என எண்ணுகின்றேன்)இதில் நான்குவிதமாக ஆக்ஷன்கள் உள்ளது. Bottom Right PageCurl,Bottom Left PageCurl.Top Right Pagecurl.Top Left PageCurl என நான்கு வித வசதிகள் உள்ளது. இப்போது சாதாரண புகைப்படம் Page Curl Action மூலம் எப்படி மாறுகின்றது என பாருங்கள். கீழே உள்ள புகைப்படம் பாருங்கள்.



 மாற்றவேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்துவிட்டு நீங்கள் தேவையான ஆக்ஷன் டூலை தேர்வு செய்யவேண்டியதுதான. உங்களுக்கு சில நிமிடங்களில் படம் மாறிவிடும்.

போட்டோஷாப்-வாட்சில் புகைப்படம் கொண்டுவர-53




நாம் பிரபல திரைப்பட நடிகராகவோ-அரசியல் வாதியாகவோ இருந்தால் நம்முடைய படம் போட்டு வாட்ச் - சுவர்கெடிகாரங்கள் விற்பார்கள். நமக்கு அந்த வாய்ப்பே இல்லை.(நாம் எங்கே நடிகராகவோ-அரசியல்வாதியாகவோ மாறபோகின்றோம்..சென்ஷே இல்லை).நாம் நமது படம் போட்ட வாட்ச் கொண்டு வந்தால் எப்படி இருக்கும். போட்டோஷாப்பில் அதனை சுலபமாக கொண்டுவரலாம். நாளை நாம் பெரிய ஆளாக வருவதற்கு இதனை முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம். இனி அவ்வாறு வாட்ச்சில் நமது புகைப்படம கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம். முதலில் இந்த ஆக்ஷன் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.மு்ன்னர் சொல்லியபடி இதனை போட்டோஷாப்பில் லோடு அக்சன் மூலம் கொண்டுவந்துவிடவும். இப்போது லோடு அக்சனில் கடைசியாக நீங்கள்கொண்டுவந்த ஆக்சன் இருக்கும். அதில் Create the Watch என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு சில நிமிடங்களில கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வரும் Continue கிளிக் செய்ய உங்களுக்கு Type your Text Here என்கின்ற விண்டோபாக்ஸ் வரும். அதில் உங்கள் பெயரையோ நீங்கள் விரும்பும் பெயரையோ தட்டச் சு செய்யவும்.பினனர் மீண்டும Action Windowவில் உள்ள Create the watch கிளிக் செய்யு்ஙகள்.இப்போது கெடிகாரத்தின் கீழ்புறம் Type your Text Here வரும். அதிலும் விருப்பமான பெயரை தட்டச்சு செய்யுங்கள்.இப்போது மீண்டும முன்பு செய்ததுபோல் செய்து Continue கிளிக் செய்யுங்கள். மணி முள்,வினாடி முள், நொடி முள் ஆகியன வரும் தேவையான மணியை -நேரத்தை-டைமை செட் செய்யுங்கள். இறுதியாக என்டர் தட்டுங்கள். அவ்வளவுதான் சில நொடிகள் காத்திருப்புக்கு பின் உங்களுக்கு கெடிகாரம் தோன்றும்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
இப்போது கடிகாரத்தின் நடுவில் நமது புகைப்படம் கொண்டுவரவேண்டும். இப்போது மீண்டும் Action Window கிளிக் செய்து அதில் Optional Add in image கிளிக செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.வரும் கிராப் விண்டோவை  புகைப்படத்திற்கு மையமாக வைத்து என்டர் கொடுங்கள். தொடர்நது வரும் விண்டோக்களில் Continue கொடுத்துக்கொண்டே வாருங்கள். சில நொடிகளில் உங்கள் புகைப்படம் வாட்ச் நடுவில இருப் பதை காணலாம் கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இதையே நீங்கள் பெரிய சைஸில் பிரிண்ட் எடுத்து நடுவில் சுவர்கெடிகாரத்தினுடைய மெஷின்(ரூபாய் 40 லிருந்து 60 ரூபாய்குள் தான் மெஷின் விலை வரும்) செட் செய்து லேமினெட் செய்துவிட்டால் பார்க்க அழகாக இருக்கும்

போட்டோஷாப் -சிறப்பு அஞ்சல்தலை வெளியிட-52


ஹலோ...ஹலோ....கொஞ்சம் இருங்க...என்னடா இவன் இப்போதான் பதிவுலகுக்கு வந்தான். இதற்குள் இவனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுட்டாங்களே என நினைக்கவேண்டாம்.இன்று நாம் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். நாளையே நாம் நாடு போற்றும் பெரிய மனிதர்களாக மாறி நமக்காக சிறப்பு தபால்தலை வெளியிட்டால் எப்படி இருக்கும்.நமது கற்பனையை போட்டோஷாப் மூலம் செயல்படுத்தலாம். போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். இந்த ஸ்டாம்ப் ஆக்ஷனை இங்குகிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.போட்டோஷாப்பினுள் லோடு அக்ஷன் மூலம் அதனை கொண்டுவந்துவிடுங்கள்.(முந்தைய போட்டோஷாப் பதிவில் இதைப்பற்றி போட்டுள்ளேன்)இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் இரண்டு மாடல்களில் ஸ்டாம்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்கள் விரும்பும் படத்தை தேர்வு செய்யுங்கள்.
 படம் தேர்வானதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். மீண்டும் அக்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இதில் நீங்கள் விரும்பும் தேதியை நிரப்பிக்கொள்ளுங்கள்.இந்த தேதிதான் உங்கள் ஸ்டாம்பில் முத்திரை தேதியாக வரும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேதியை தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ளுங்கள்..
மீண்டும் கிளிக் செய்து இறுதியாக ஸ்டாப் வரும் வரை ஓ.கே. தாருங்கள். கீழே வந்துள்ள Stamp புகைப்படம்
நாளைய பிரபலங்கள்-




என்னங்க....சிறப்பு அஞ்சல்தலை யை போட்டோஷாப்பில் கொண்டுவரு வதை பார்த்திங்களா...இப்போ முத்திரை குத்துவதாக நினைத்து உங்க ஓட்டை குத்திட்டுபோங்க...நாளை சந்திப்போம்...

போட்டோஷாப் - பேப்பர் வெயிட்டில் புகைப்படங்கள் வரவழைக்க-51


சாராண பேப்பர் வெயிட் பார்த்திருப்போம். ஒரு மாறுதலுக்கு கியுப்பில் நமது புகைப்படங்களை ஒட்டி அழகான பேப்பர் வெயிட்டாக வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கு்ம். இதற்காக நாம் மெனக்கெட்டு ஒவ்வொரு போட்டோவாக கட்செய்து ஒட்ட வேண்டாம். போட்டோஷாப்பில் நாம் தேவையான புகைப்படங்கள் கொடுத்தால் போதும். அதுவே அழகாக பாக்ஸ் அளவிற்கு நமக்கு மாற்றி தந்துவிடும். அந்த Action-ஐ பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் தேவையான 5 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நம் சக பதிவர்களான திரு.முனைவர் குணசீலன்.திரு.சபீர்.திரு.ஜெய்லானி(அவர் புகைப்படம் கிடைக்காததால் அவரின் பெவரைட் பச்சை ரோஜா படம் எடுததுள்ளேன்) திரு.ஞானசேகரன்,மற்றும் திரு.ப்ரியமுடன் வசந்த்.
ஒவ்வொரு படங்களும் 747 x 747 பிக்ஸல் அளவிலும் ரெசுலேஷன் 300 பிக்ஸல் அளவிலும் கிராப் டூல் மூலம் கட் செய்து தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் தேர்வு செய்த படங்கள் கீழே-











இப்போது Action Box Open செய்து அதில் இந்த Paper Cube  ஐ கொண்டுவந்துவிடுங்கள். இதை பற்றி முந்தைய பதிவுகளில் விரிவாக போட்டுள்ளேன் புதியவர்கள் இங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்..இப்போது உங்களுக்கு Action Paper Cube  இந்த மாதிரி வந்துவிடும். இப்போது அதில் உள்ள 5 images  என்பதை கிளிக்செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு படங்களை தேர்வு செய்ய சொல்லும் . நீங்கள் முதல் படத்தை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்த படம் கீழே-
இப்போது Continue கொடுத்து அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யுங்கள். சில நிமிடங்களுக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.
இதை A4 போட்டோ பேப்பரிலோ - சாதாரண பேப்பரில் எடுத்து கனமான அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள. இதில் படம் உள்ள இடம் தவிர காலியாக உள்ள இடங்களை வெட்டி எடுத்துவிடுங்கள். பின்னர் படம் தவிர்த்து ஓரங்களை மடித்துக்கொள்ளுங்கள். நல்ல ஒட்டும் பசையை எடுத்து அதில் உள்ளவாறு ஒவ்வொன்றாக ஒட்டுங்கள். அவ்வளவுதான் பேப்பர் வெயிட் அழகான படங்களுடன் ரெடி.
இதே படத்தினை ஒரே போட்டோவின் மூலமும் செய்யலாம். அனைத்துப்பக்கங்களிலும் ஒரே போட்டோ வரும்.குழந்தைகள் போட்டோ போடும் சமயம் மிக அழகாக இருக்கும். 
சக பதிவரின் குழந்தை படம் கீழே-
இதை போட்டோ பாக்ஸில் கொண்டுவந்தபின் வந்த படம் கீழே-
நாளை விடுமுறைதானே..அழகான புகைப்படங்களை இதுபோல் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
செய்து பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.