நாம் பிரபல திரைப்பட நடிகராகவோ-அரசியல் வாதியாகவோ இருந்தால் நம்முடைய படம் போட்டு வாட்ச் - சுவர்கெடிகாரங்கள் விற்பார்கள். நமக்கு அந்த வாய்ப்பே இல்லை.(நாம் எங்கே நடிகராகவோ-அரசியல்வாதியாகவோ மாறபோகின்றோம்..சென்ஷே இல்லை).நாம் நமது படம் போட்ட வாட்ச் கொண்டு வந்தால் எப்படி இருக்கும். போட்டோஷாப்பில் அதனை சுலபமாக கொண்டுவரலாம். நாளை நாம் பெரிய ஆளாக வருவதற்கு இதனை முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம். இனி அவ்வாறு வாட்ச்சில் நமது புகைப்படம கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம். முதலில் இந்த ஆக்ஷன் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.மு்ன்னர் சொல்லியபடி இதனை போட்டோஷாப்பில் லோடு அக்சன் மூலம் கொண்டுவந்துவிடவும். இப்போது லோடு அக்சனில் கடைசியாக நீங்கள்கொண்டுவந்த ஆக்சன் இருக்கும். அதில் Create the Watch என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு சில நிமிடங்களில கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வரும் Continue கிளிக் செய்ய உங்களுக்கு Type your Text Here என்கின்ற விண்டோபாக்ஸ் வரும். அதில் உங்கள் பெயரையோ நீங்கள் விரும்பும் பெயரையோ தட்டச் சு செய்யவும்.பினனர் மீண்டும Action Windowவில் உள்ள Create the watch கிளிக் செய்யு்ஙகள்.இப்போது கெடிகாரத்தின் கீழ்புறம் Type your Text Here வரும். அதிலும் விருப்பமான பெயரை தட்டச்சு செய்யுங்கள்.இப்போது மீண்டும முன்பு செய்ததுபோல் செய்து Continue கிளிக் செய்யுங்கள். மணி முள்,வினாடி முள், நொடி முள் ஆகியன வரும் தேவையான மணியை -நேரத்தை-டைமை செட் செய்யுங்கள். இறுதியாக என்டர் தட்டுங்கள். அவ்வளவுதான் சில நொடிகள் காத்திருப்புக்கு பின் உங்களுக்கு கெடிகாரம் தோன்றும்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
இப்போது கடிகாரத்தின் நடுவில் நமது புகைப்படம் கொண்டுவரவேண்டும். இப்போது மீண்டும் Action Window கிளிக் செய்து அதில் Optional Add in image கிளிக செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.வரும் கிராப் விண்டோவை புகைப்படத்திற்கு மையமாக வைத்து என்டர் கொடுங்கள். தொடர்நது வரும் விண்டோக்களில் Continue கொடுத்துக்கொண்டே வாருங்கள். சில நொடிகளில் உங்கள் புகைப்படம் வாட்ச் நடுவில இருப் பதை காணலாம் கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதையே நீங்கள் பெரிய சைஸில் பிரிண்ட் எடுத்து நடுவில் சுவர்கெடிகாரத்தினுடைய மெஷின்(ரூபாய் 40 லிருந்து 60 ரூபாய்குள் தான் மெஷின் விலை வரும்) செட் செய்து லேமினெட் செய்துவிட்டால் பார்க்க அழகாக இருக்கும்




No comments:
Post a Comment