Friday, January 7, 2011

போட்டோஷாப் பாடம்-14(செய்முறை பயிற்சி-2)






"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" நண்பர்

ஒருவர் காலையில் போனில் பேசும்போது

இந்த பழமொழியை சொன்னார். நமது முகத்தை

போட்டோஷாப் மூலம் மெருகேற்றுவது எப்படி

என பார்க்கலாம். திருமணத்திற்கு பெண்ணோ -

மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் போட்டோ

கொடுப்பார்கள்.. நமது போட்டோவை இந்த

சாப்ட்வேர் மூலம்மெருகேற்றிக்கொடுத்தால்

வரும் வரன் நிச்சயம்அமையும்.

(இந்த பதிவு எழுதுவது திருமணம்

ஆகாதவர்களுக்குமட்டுமே-திருமணம் ஆனவர்

கள் குழந்தைகளின் போட்டாக்களில் இதை

முயற்சிக்கலாம்). இந்த சாப்ட்வேரில்

நமது புகைப்படத்தை கொடுத்தால் நமது

முகத்தில் உள்ள சிறு சிறு பள்ளங்களை

நிரப்பி முகத்தை பாலிஷ் செய்து கொடுத்து

விடும். பின் இந்த படத்தை தைரியமாக

வரன் தேட கொடுக்கலாம்.(பெண் வீட்டிலும்

தருகின்ற போட்டோவை பார்த்து அடடா

பெண் எவ்வளவு அழகு என வியந்துவிடாதீர்

கள். அவர்களும் இந்த சாப்ட்வேரை உபயோகித்து

அவர்களை அழகாக மாற்றி உங்களுக்கு

போட்டோவை கொடுத்து அனுப்பி

யிருக்கலாம்.எனவே திருமணத்திற்கு

முன் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து

முடிவு செய்யவும்).போட்டோஷாப்பில்

இதற்கென தனியே பில்டர் உள்ளது.

ஆனால் அதை போட்டோஷாப் மூலமே

உபயோகப்படுத்த முடியும்.(தங்களுக்கு

போட்டோஷாப் பாடங்கள் தொடர்ந்து

வரும் சமயம் இதை விரிவாக காணலாம்)

ஆனால் இந்த சாப்ட்வேரைபோட்டோஷாப்

உதவியில்லாமல்தனியே யார்வேண்டுமானாலும்

பயன்படுத்தலாம். முதலில் இந்த

சாப்ட்வேரை இங்கு சென்று டவுண்லோடு

செய்து கொள்ளவும். (இதுவும் 2.5 எம்.பி. அளவுதான்)

பின்னர் இதை ஓப்பன் செய்யவும்.

பின்னர் பைல் சென்று ஓப்பன்

செய்து நீங்கள் மாற்ற விரும்பும் படத்தை

தேர்வு செய்யவும்.



இதில் வலது புறம் பார்த்தால் உங்களுக்கு கீழ்

கண்ட விண்டோ தென்படும்.



இந்த விண்டோ உங்களுக்கு வரவில்லை

யென்றால் நீங்கள் வியு சென்று Noise Filter

எதிரே கிளிக் செய்யவும்.

இதில் உள்ள Noise Level Adjustment

மற்றும் Noise Subression

படத்தின் மேடு பள்ளத்திற்கு ஏற்ப

வேண்டிய அளவு வைத்துக்கொள்ளவும்.

அடுத்து Filter-Process-கிளிக்

செய்யவும். அல்லது Ctrl+Enter

தட்டவும்.



உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



ஓகே கிளிக் செய்யவும். உங்களது படம் ரெடி.


இதை வேண்டிய இடத்தில் Save As செய்யவும்.

உங்கள் படம் ரெடி.

நான் மாற்றம் செய்த படங்களின் மாடலகள் கீழே..

சாப்ட்வேர் உபயோகிக்கும் முன்:-
உபயோகித்த பின்னர் படம் கீழே:-

உபயோகிக்கும் முன்:-



உபயோகித்த பின்:-




உபயோகி்க்கும் முன்:-


உபயோகித்த பின்:-


பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன்

முடித்துக்கொள்கின்றேன்.

பதிவை பாருங்கள்

No comments:

Post a Comment