Friday, January 7, 2011

வேலன்:-போட்டோஷாப் பாடம்-13(செய்முறை பயிற்சி-1)


போட்டோஷாப்பில் இது வரை மார்க்யு டூல்

பற்றிஒன்பது பாடங்களும்,பத்தாவது பாடத்தில்

Image மற்றும் Duplicate பற்றி பார்த்தோம்.

அதுபோல் பதினோறாம் பாடத்தில்

மூவ் டூல் பற்றி பார்த்தோம்.

பன்னிரண்டாம் பாடத்தில் பென்டூல்

பற்றி பார்த்தோம்.இதுவரை பாடங்கள்

படிக்காதவர்கள்இங்கு சென்று பாடங்கள்

பார்த்துக்கொள்ளவும்.



இதுவரையில் படித்த பாடத்தை

கொண்டு செய்முறை பாடம் ஒன்றை

இப்போது பார்க்கலாம்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.

நான் கமல் - பிரபுவை

இதுவரை சந்தி்த்ததில்லை. ஆனால்

படம் எப்படி? அதுதான் போட்டோஷாப்.


இனி இதை எப்படி போட்டோஷாப்பில்

செய்யலாம் என் பார்க்கலாம்.

முதலில் நீங்கள் சேர்க்க விரும்பும் படங்கள்

இரண்டை தேர்வுசெய்துகொள்ளவும்.

நான் கீழே உள்ள இரண்டு படங்களை

பாருங்கள். முதலில் எனது படம்.


அதுபோல் கமலும் பிரபுவும் உள்ள வசூல்ராஜா

படம்.(இணையத்தில் எடுத்தது)

இப்போது இந்த படத்தின் Image கிளிக்

செய்து படத்தின் அளவை குறித்துக்கொள்ளுங்கள்.


இதே அளவிற்கு மற்றும்ஓரு படத்தையும்

மாற்றிக்கொள்ளுங்கள்.(இதைப்பற்றிய

விவரம் பத்தாவது பாடத்தில் உள்ளது)

இப்போது கமல் பிரபு உள்ள படத்தில்

கமலை பென்டூலால் சிறிய இடைவெளி

களில் கட் செய்யவும். முன் பாடத்தில்

சொல்லியபடி செய்து படத்தை மூவ் டூல்

மூலம் படத்தை மற்றும் ஓரு படத்திற்கு

கொண்டு வரவும்.


படம் சரியாக பொருத்த Transform Tool மூலம்

சரிசெய்யவும். மேலே உள்ள படத்தை பாருங்கள்.

இனி அடுத்து பிரபு படத்தை முன்பு சொன்னது

போல் பென்டூலால் கட் செய்து இதுபோல்

கொண்டு வரவும்.



படத்திற்கு சரியானபடி மூவ் டூல் மற்றும்

டிரன்ஸ்பார்ம் டூல் கொண்டு சரிசெய்யவும்.



உங்களுக்கு மேலே உள்ளவாறு படம் கிடைக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது:-

தேர்ந்தெடுக்கும்படங்கள் இரண்டும் ஓரே

அளவு மற்றும் ரெசுலேஷன் அளவை கொண்டு

இருக்க வேண்டும். உங்களுக்கு

விருப்பமான படங்களை தேர்ந்தெடுங்கள்.

இதுபோல் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல்

ஓட்டுப்போடுங்கள்.


வாழ்க வளமுடன்,

வேலன்.

JUST FOR JOLLY PHOTOES


மேலே உள்ளது போட்டோஷாப்பில் டிசைன்

செய்த போட்டோ..ஒரிஜினல் போட்டோ கீழே:-



இனிவரும் பாடங்களில் வெள்ளம் - மழை -

எப்படி வரவழைப்பது என பார்க்கலாம்.

No comments:

Post a Comment