Friday, January 7, 2011

போட்டோஷாப் பாடம்-16








சென்ற பாடத்தில் Foreground & Backround Colour பற்றி

பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இன்று

காணலாம். சென்ற பாடம் படிக்காதவர்கள்

இங்கு கிளிக் செய்யவும்.

சென்ற பாடத்தில் பொதுவாக கலர்

எப்படி கொண்டு வருவது என பார்த்தோம்.

இன்று நமது சட்டைகலர் -பேண்ட்கலர்-

அல்லது பின்புறம் உள்ள கலர் இவைகளை

எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம்.

எதாவது ஓரு படத்தை ஓப்பன் செய்து

கொள்ளுங்கள்.கலர் கலராக சர்ட் உள்ளதால் நான்

இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.



இப்போது டூல் வரிசையில் உள்ள Backround Tool

தேர்வு செய்யுங்கள்.


இப்போது பேக்ரவுண்ட் டூலின் நடுவில் வைத்து

கர்சரால் கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு

இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது நீங்கள் உங்கள் கர்சரை சட்டையின்

மீது கொண்டு சென்று எந்த இடத்தின் கலர்

வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை நிறுத்துங்கள்.

உங்கள் கர்சரானது சிறிய கத்திபோல் மாறிவிடும்.

இப்போது கர்சரை கிளிக் செய்யுங்கள். நீங்கள்

தேர்வு செய்யும் நிறத்திற்கு ஏற்ப கலர் பிக்கரில்

சிறிய வட்டம் தோன்றுவதை காணலாம்.



நான் மேற்கண்ட படத்தில் மஞ்சள் நிற சட்டையை

தேர்வு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தில்

எனது மகனின் சட்டை கலரை தேர்வு செய்து

உள்ளேன்.



இனி ஓகே கொடுங்கள்.இப்போது டூல்களில் உள்ள

பேக்ரவுண்ட் கலரின் நிறம் மாறி யிருப்பதை காண்

பீர்கள்.முன் பாடத்தில் சொன்னவாறு புதிய

விண்டோ ஓப்பன் செய்து shift+F5 அழுத்துங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




தேவையானதை தேர்ந்தேடுங்கள். இப்போது நாம்

Backround Colour -ஐ மட்டும் பார்க்கலாம். Foreground

Colour -ஐ பற்றி பின் வரும் பாடங்களில் படிக்கலாம்.



எனது சட்டையின் நிறத்திற்கு பேக்கிரவுண்ட்

கலர் தேர்வுசெய்த படம் கீழே:-


கலரின் உபயோகங்கள் பின்வரும் பாடங்களில்

வரவிருப்பதால் இதை பற்றி தெரிந்தகொள்ளவே

இந்த பாடம். மேட்சிங் விரும்பும் அன்பர்கள்

அவர்களின் சட்டை-புடவை -ஜாக்கெட் நிறத்திற்கு

ஏற்ப பின்புற கலரை தேர்வுசெய்து அவர்களின்

படத்தை பென் டூல் கொண்டு கட்செய்து

பின்புற நிறத்தில் பொருத்திகொள்ளலாம்.

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன்

முடித்துக்கொள்கின்றேன்.

அடுத்த போட்டோஷாப் பாடம் திங்கள்

அன்று வரும்.

No comments:

Post a Comment