Monday, January 10, 2011

போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது பெயர்கொண்டுவர-39


 போட்டோஷாப்பில் இன்று பிரஷ் டூல் பற்றி பார்க்கலாம். இது டூல்பாரில் 8 ஆவதாக உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதன் மூலம் என்ன செய்யலாம். கோடு போடலாம். ரோடு போடலாம். உருவத்தை மறைக்கலாம். உருவத்திற்கு மெல்லிய மீசை போடலாம். சரி இதை எப்படி கொண்டுவருவது. நீங்கள் இந்த டூலை கிளிக் செய்தபின்னர் மேலே உங்களுக்கு மெனு பாருக்கு கீழே பிரஷ் படமும் அதை அடுத்து ஆங்கிலத்தில் Brush: என்று போட்டு அதற்கு பக்கத்தில் ஒரு சின்ன கீழு்நோக்கிய அம்புக்குறியும் இருக்கும். அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 1 முதல் 13 வரையிலும் மெல்லியதாகவும் தடிமனாகவும் விதவிதமான கோடுகள் இருக்கும். தேவையான கோட்டினை கிளிக் செய்து தேவையான படத்தில் வரையவும். அதைப்போல் Master Diameter கீழ் உள்ள ஸ்லைடரை நகர்த்த உங்களுக்கு கோட்டின் சைஸ் பெரியதாகும். கீழே உள்ள படத்தினை பாருங்கள். விதவிதமான சைஸ்களில் கோடு போட்டுள்ளேன்.

இந்த டூல் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்யலாம்.நமது பெயரையே பிரஷ்டூலாக கொண்டுவரலாம். அதனால் என்ன பயன்...அவசரத்திற்கு இந்த டூல்மூலம் உடனடியாக பெயரை பதித்துவிடலாம்.அதை எப்படி கொண்டுவருவது? முதலில் உங்கள் பெயரை தமிழிலோ ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.(முந்தைய பாடங்களில் பெயரை தட்டச்சு செய்வதை பதிவிட்டுள்ளேன்)கீழே உள்ள படத்தினை பாருங்கள்.


ஆங்கிலத்தில் எனது பெயரை தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
 பின்னர் Edit மெனு கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Define Brush Preset கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
O.K. கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் பிரஷ்டூலாகசெட்டாகிவிட்டது.சரி - இந்த டூலை எப்படி உபயோகிப்பது. நீங்கள் உபயோகிக்கும் படம் அல்லது புதிய விண்டோவினை திறந்து கொள்ளுங்கள்.பின்னர் பிரஷ் டூல் கிளிக்செய்யுங்கள்.மெனுபாரின் கீழே உள்ள ஆங்கில எழுத்து பிரஷ் பக்கத்தில் உள்ள கீழ் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு விண்டோ ஓப்பன ஆகும். அதில் உள்ள ஸ்ரால் பாரினை கீழே நகர்த்த கடைசியில் உங்கள் பெயருடன் கோடு இருக்கும் . அதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் உங்கள் பெயர் வர விரும்புகின்றீர்களோ அந்த இடத்தில் வைத்து ஒரே ஒரு கிளிக்செய்யுங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் வந்துவிட்டது. நீங்கள்Forgroundcolor கலராக எதை வைத்துள்ளீர்களோ அந்த கலருடன் பெயர் வந்துவிடும். உங்களுக்கு உங்கள் பெயர் திக்காக வரவேண்டுமானால் மவுஸால் தொடர்ந்து அழுத்துங்கள். அதைப்போல் உங்கள் எழுத்தின் அளவினை அதிகப்படுத்தவிரும்பினால் Master Diameter -ல் உள்ள ஸ்லைடை நகர்த்துங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் பெரிதாக வரும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
உங்கள் பெயரில் பிரஷ்டூல் கொண்டுவருவதை பற்றி தெரிந்துகொண்டோம் அல்லவா..அடுத்த பதிவில் நமது புகைப்படத்தை பிரஷ் டூலாக கொண்டுவருவதைப்பற்றி பார்க்கலாம். அதைப்போலவே விதவிதமான பிரஷ்டூல்கள் பற்றியும் அதை எப்படி போட்டோஷாப்பில் இணைப்பது என்றும் பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ம்...கண்டுக்காதீங்க..சமையல் பதிவை பார்த்து வீட்டில்
 செய்துபார்த்தேன்.அதுஎன்னவோதெரியலை...
இப்படியாகிவிட்டது...யாரிடமும் இதை சொல்லாதீங்க...!
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
 டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment