இன்றைய பதிவில் நமது புகைப்படத்தை அசையும் படமாக நாமே மாற்றுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.முதலில் தேவையான படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் கண் இமைகளை மூடி திறப்பது போன்று மூன்று படங்களை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது நீங்கள் Adope Image Ready என்பதனை திறந்துகொள்ளுங்கள். போட்டோஷாப்புடன இணைந்துவரும் சாப்ட்வேர் இது.அதில் Window என்பதின் கீழ் உள்ள Animation கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழ்புறத்தில் ஒரு நீளமான பாக்ஸ் தோன்றும்.இப்போது நீங்கள் இந்த மூன்று கண்கள் புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள்.கண் image size எந்த அளவில் உள்ளதோ அதே image sizeஅளவில் புதிய விண்டோவையும் திறந்துகொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு 4 விண்டோக்கள் கிடைக்கும். அதில் மூன்றில் கண் படங்களும் ஒன்றில் எந்த படமும் இல்லாமல் இருக்கும். கீழ்கண்ட விண்டோ வினை பாருங்கள்.
இப்போது கண் முற்றிலும் முடிஉள்ள படத்தை மூவ்டூல் மூலம் இழுத்து வந்து புதிய விண்டோவில் விடவும் இப்போது கீழே அனிமேஷன் பாக்ஸில் உங்களுக்கு கண்படம் தெரியும்.
இப்போது பழைய கண்விண்டோவை டெலிட் செய்துவிடுங்கள். இதைப்போலவே மூன்று கண்களையும் புதிய விண்டோவில் இழுத்துவந்து விட்டு பழைய விண்டோக்களை டெலிட் செய்துவிடுங்கள். கடைசியாக உங்களுக்கு ஒரே ஒரு விண்டோ தான் இருக்கும். இப்போது அந்த அனிமேஷன் பாரில் வலது மூலையில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Make Frame from layers என்பதனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள வெள்ளை நிற பாக்ஸை டெலிட் செய்துவிட வேண்டும் அதற்குமுதலில் உள்ள வெள்ளை நிற பாக்ஸை தேர்வு செய்து கீழே உள்ள சிறிய குப்பை தொட்டி போன்ற படத்தை கிளிக் செய்யுங்கள். Deletes Selected Frames என்கின்ற மெசேஜ் வரும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
டெலிட் கொடுத்துவிடுங்கள். இப்போது உங்களுக்கு உங்களுடைய மூன்று கண் படங்கள் மட்டும் தெரியும்.
இப்போது முதல் படத்தின் கீழே பார்த்தீர்களே யானால் Sec போட்டு சிறிய் முக்கோணம் இருக்கும் அதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் ஒவ்வோரு படமும் எவ்வளவு வினாடிகள் தோன்றவேண்டும் என அளவு இருக்கும். நாம் வேண்டிய அளவினை கொடுத்து அதில் உள்ள பிளே பட்டனை அழுத்தி ப்ரிவியு பார்க்கலாம்.வினாடிகளில் வித்தியாசபடுத்த படம் அசையும் நேரம் மாற்றம் அடையும். இறுதியாக நீங்கள் செய்த படத்தை எதாவது ஒரு போல்டரில் Save Optimized செய்துவிடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அவ்வளவுதாங்க. இப்போது நீங்கள் சேவ் செய்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களுக்கு உங்கள் படம் அசையும் படமாக இருக்கும். இரண்டு வேவ்வேறு வினாடிகள் கண்சிமிட்டும் படததை நான் கீழே பதிவிட்டுள்ளேன். பாருங்கள்.
மற்றும் ஒரு படம் கீழே-
இரண்டும் ஒரே படம் தான் . கண்சிமிட்டும் நேரங்களில் தான் வித்தியசம் வரும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சினிமா படங்களில் இதனை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன்.
.விருதுக்கு நன்றி...
திரு.கக்கு மாணிக்கம் அவர்கள் பெஸ்ட் பிளாக்கர் விருதினை அளித்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.
அவர் விருது வழங்கிய பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
திரு.கக்கு மாணிக்கம் அவர்கள் பெஸ்ட் பிளாக்கர் விருதினை அளித்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.
அவர் விருது வழங்கிய பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.









No comments:
Post a Comment